திருமணம் அப்போதுதான்.. ஓப்பனாக போட்டுடைத்து நடிகை சதா சொன்ன விஷயம்.! ரசிகர்கள் ஷாக்!!



actress-sadha-open-about-her-marriage

தமிழ் சினிமாவில் ரவி மோகன் நடிப்பில் வெளிவந்து மாபெரும் ஹிட்டான ஜெயம் படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நடிகை சதா. முதல் படத்திலேயே இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அவர் எதிரி, வர்ணஜாலம், திருப்பதி, பிரியசகி, உன்னாலே உன்னாலே, அந்நியன் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

மேலும் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களிலும் நடித்து பிரபலமாக இருந்தார். பின்னர் அவர் இறுதியாக டார்ச்லைட் என்ற படத்தில் விலைமாதுவாக நடித்திருந்தார். தொடர்ந்து தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்த அவர் தற்போது முற்றிலும் சினிமாவில் இருந்து விலகியுள்ளார். மேலும் புகைப்பட கலைஞராக மாறியுள்ளார். காட்டுக்குள் சென்று பறவைகள் வன விலங்குகளை புகைப்படம் எடுத்து வருகிறார் மேலும் அதனை தனது சமூக வலைதள பக்கங்களிலும் பகிர்ந்து வருகிறார். 

Sadha

இந்த நிலையில் 41 வயதாகும் சதாவிற்கு திருமணம் எப்போது என ரசிகர்கள் அவரிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கு அவர், "திருமணத்தின் மீது எனக்கு ஆசையும் இல்லை நம்பிக்கையும் இல்லை. புகைப்பட துறையில் நிறைய சாதிக்க வேண்டும். அதன் பின்தான் திருமணத்தை பற்றி யோசிப்பேன். எல்லாவற்றையும் காலம் பார்த்துக் கொள்ளும். அவசரம் எதற்கு? " என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: நடிகர் மாதவனின் திருமண நாளில் பகிரப்பட்ட இனிய பதிவு! மனைவி என்ன செய்கிறார் தெரியுமா? இவரும் சாதனையாளராம்.. கணவர் போட்ட நெகிழ்ச்சி பதிவு...

இதையும் படிங்க: செம ஹாட் உடையில் தீவிரமாக யோகா பயிற்சி செய்யும் நடிகை கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் புகைப்படங்கள்...