நடிகர் மாதவனின் திருமண நாளில் பகிரப்பட்ட இனிய பதிவு! மனைவி என்ன செய்கிறார் தெரியுமா? இவரும் சாதனையாளராம்.. கணவர் போட்ட நெகிழ்ச்சி பதிவு...



madhavan-wife-sarita-life-details

நடிகர் மாதவன், தமிழ் சினிமாவில் இளைஞர்களின் மனங்களை கொள்ளை கொண்ட முன்னணி நடிகராக இருந்தவர். இவரது நடிப்பில் வெளியான கடைசி படம் "டெஸ்ட்". இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார். கிரிக்கெட் மற்றும் குழந்தையில்லாத தம்பதியின் வாழ்க்கை வலி ஆகியவற்றை மையமாகக் கொண்ட படமான இது விமர்சன ரீதியாக வரவேற்கப்பட்டது.

அதன்பிறகு, மாதவன் பற்றிய தகவல்களுடன் அவரது மனைவி சரிதா பற்றிய செய்திகள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மாதவன் சரிதா

காதல் முதல் திருமணம் வரை

சரிதா, அக்டோபர் 14 அன்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பிறந்தவர். 1990களில் விமானப் பணிப்பெண் ஆக வேண்டும் என்ற கனவுடன் பயிற்சி மேற்கொண்டார். கோலாப்பூரில் நடந்த ஆளுமை மேம்பாட்டு பயிற்சி முகாமில் மாதவன் பயிற்சியாளராக இருந்தார். அங்குதான் அவர்கள் முதன்முதலில் சந்தித்தனர்.

இதையும் படிங்க: செம ஹாட் உடையில் தீவிரமாக யோகா பயிற்சி செய்யும் நடிகை கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் புகைப்படங்கள்...

1மாதவன் சரிதா

991இல் தொடங்கிய அவர்களது காதல் பயணம், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு திருமணத்தில் முடிவுற்றது. தமிழ் மரபுப்படி நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் இவர்களின் திருமணம் நடைபெற்றது.

மகன் வேதாந்தின் பிறப்பு மற்றும் சாதனை

2000ஆம் ஆண்டு மாதவன் நடித்த அலைபாயுதே திரைப்படம் அவரது வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அதன்பிறகு, 2005 ஆகஸ்ட் 21 அன்று இவர்களுக்கு வேதாந்த் என்ற மகன் பிறந்தார். தற்போது வேதாந்த் ஒரு சர்வதேச நீச்சல் வீரராக சாதனை படைத்து வருகிறார்.

சரிதா இப்போது என்ன செய்கிறார்

சரிதா வெறும் பிரபல நடிகரின் மனைவியாக இல்லாமல், ஃபேஷன் டிசைனர் ஆவார். மாதவனின் பல திரைப்படங்களில் உடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். தற்போது, ஆஸ்திரியா நாட்டின் க்ளாகன்ஃபர்ட் பகுதியில் "சரிதா" என்ற பெயரில் தனிப்பட்ட ஆடை நிறுவனத்தை நடத்துகிறார்.

மாதவன் சரிதா

மேலும், மாதவனும் சரிதாவும் இணைந்து லியுகோ பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் இயக்கி வருகின்றனர். மாதவன் கூறுவதில், “என் வீட்டுச் செலவுகளை கவனிக்கிறவர் என் மனைவி தான்” என குறிப்பிட்டுள்ளார்.

சமூக நிகழ்ச்சிகளிலும் துணையாகவே இருக்கிறார்

மாதவன் சரிதா

பாலிவுட் உலகத்தில் அறிமுகமான மாதவனுக்கு எண்ணற்ற பெண் ரசிகர்கள் இருந்தபோதிலும், அனைத்து நிகழ்ச்சிகளிலும் அவருடன் சரிதா துணையாக இருப்பது பார்க்கமுடிகிறது. நிதி திரட்டும் ஃபேஷன் ஷோக்கள் முதல் திரைப்பட விழாக்கள் வரை இருவரும் பங்கேற்பது வழக்கமாகிவிட்டது.

திருமண நாளில் பகிரப்பட்ட இனிய பதிவு

26வது திருமண நாளில், சரிதா தனது பதிவில்,

கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு சிறந்த முடிவை எடுத்தேன். அதான் உங்களை திருமணம் செய்தது என குறிப்பிட்டுள்ளார்.

மாதவனும்,

“எனக்குத் தேவையான அனைத்தையும் கொடுத்த என் மனைவிக்கு நன்றி. ஒரு கணத்தையும் மாற்ற விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த இனிய காதல் பதிவுகள் ரசிகர்களிடையே பரவி, இருவருக்கும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது.

 

இதையும் படிங்க: கோடி கோடியாய் சம்பளம் வாங்கி வாழ்க்கை வாழும் நடிகர் விஜய்யின் அசர வைக்கும் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா?