ரஜினியின் படத்தை பார்த்துவிட்டு... 40 ஆண்டுகளாக அந்த தவறை செய்துவிட்டேன்.! ஓபனாக உடைத்த இயக்குனர் சசிகுமார்.!



Actor sasikumar talk about money in interview

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களாக வலம் வந்த பாலா மற்றும் அமீரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் சசிகுமார். அதனைத் தொடர்ந்து அவர் சுப்ரமணியபுரம் படத்தை இயக்கி, அதில் நடித்தும் இருந்தார். இவரது முதல் படமே மெகா ஹிட்டானது. அதனை தொடர்ந்து அவர் இயக்கிய ஈசன் திரைப்படமும் நல்ல வரவேற்பையே பெற்றது.

அதனைத் தொடர்ந்து சசிகுமார் ஹீரோவாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அண்மையில் அவரது நடிப்பில் வெளிவந்த டூரிஸ்ட் பேமிலி திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பு பெற்றது. நடிகை சசிகுமார் தற்போது சத்யசிவா இயக்கத்தில் ஃப்ரீடம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருடன் நடிகை லிஜோமோல் ஜோஷ் நடித்துள்ளார்.

rajinikanth

இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் எடுத்த பேட்டியில் நடிகர் சசிகுமார், நான் தற்போதுதான் பணம் என்றால் என்ன என்பதை குறித்து அறிந்துள்ளேன். படத்தை மதிக்க தெரிந்து கொண்டுள்ளேன். தளபதி படத்தில் ஒரு காட்சியில் ரஜினி ரத்தம் கொடுத்துவிட்டு, பணம் கொடுக்கும் போது நன்றி சொல்வார்கள். உடனே அவர் வெறும் பணம்தானே என்று கூறுவார்.

இதையும் படிங்க: பிரமாண்டமாக நடிகர் கிங்காங் வீட்டில் நடைபெற்ற விசேஷம்.! நேரில் சென்று வாழ்த்திய தமிழக முதல்வர்!!

அதெல்லாம் பார்த்துவிட்டு  பணத்தை மதிக்கவே இல்லை. ஆனால் அந்தப் பணம் 40 வருடங்களாக என்னை மதிக்காமல் இருக்கிறாயா என அதை மதிக்கும்படி வைத்துவிட்டது. அதுதான் பணத்தின் குணம்  எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தனுஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!? 12 ஆண்டுகளுக்கு பிறகு வந்த இன்பசெய்தி.!!