பன் பட்டர் ஜாம்.. அதிதி ஷங்கர் குரலில் வெளிவந்த காஜூமா பாடல்!! இணையத்தில் வைரல்.!



aditi-shankar-singing-kaajuma-song-released-from-bun-bu

ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பன் பட்டர் ஜாம். இப்படத்தில் பிக்பாஸ்  சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றியாளரான ராஜு ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அவருடன் ஆத்யா பிரசாத்,பவ்யா திரிகா, சரண்யா பொன்வண்ணன், சார்லி, தேவதர்ஷினி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்

இந்த படத்தை ரெயின் ஆப் ஆரோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். பன் பட்டர் ஜாம் திரைப்படம்  வரும் ஜுலை 18 ஆம் தேதி திரைக்கு வருகிறது

இந்நிலையில் படத்தின் முதல் பாடலான காஜுமா பாடல் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை நிவாஸ் கே பிரசன்னா மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் பாடியுள்ளனர். இந்த பாடலுக்கான வரிகளை எம்.கே. பாலாஜி எழுதியுள்ளார்.

இதையும் படிங்க: அம்மாடியோவ்... ஒரு நொடிக்கு ரூ.10 லட்சம் சம்பளம் வாங்கிய பிரபல தமிழ் நடிகை! யார் தெரியுமா?

 

இதையும் படிங்க: மகாநதி சீரியல் இயக்குனர் தனது படப்பிடிப்பு முடிந்ததாக போட்ட பதிவு! அதிர்ச்சியில் ரசிகர்கள்...