சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
நடிகை வனிதாவின் மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்திற்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா அவசர வழக்கு.! என்ன காரணம்??
நடிகை வனிதா விஜயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மிஸஸ் அண்ட் மிஸ்டர். இதில் அவரே முன்னணி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் ஹீரோவாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை வனிதாவின் மகள் ஜோவிகா தயாரித்துள்ளார்.
மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில் ஷகிலா, செஃப் தாமு, பவர்ஸ்டார் சீனிவாசன், ஸ்ரீமன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ரொமான்டிக் திரைப்படமான இப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் வனிதா விஜயகுமாரின் படத்திற்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளைஞராஜா இசையமைத்து மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தில் இடம்பெற்றிந்த ராத்திரி சிவராத்திரி பாடல் இடம்பெற்றுள்ளதாகவும், தான் இசையமைத்த பாடலை தனது அனுமதியில்லாமல் படத்தில் பயன்படுத்தி இருப்பதாகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அப்பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அம்மாடியோவ்... ஒரு நொடிக்கு ரூ.10 லட்சம் சம்பளம் வாங்கிய பிரபல தமிழ் நடிகை! யார் தெரியுமா?
மேலும் இந்த வழக்கு மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் இசையமைப்பாளர் இளையராஜா தரப்பு வழக்கறிஞர் சரவணன் முறையீடு செய்துள்ளார். இதனை தொடர்ந்து வழக்கு வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மகாநதி சீரியல் இயக்குனர் தனது படப்பிடிப்பு முடிந்ததாக போட்ட பதிவு! அதிர்ச்சியில் ரசிகர்கள்...