லைப் ஸ்டைல்

மறந்தும் கூட இந்த திசையில் தலைவைத்து தூங்காதீர்கள்- தீராத ஆபத்து வந்து சேரும்!

Summary:

Best sleeping directions in tamil

நமது முன்னோர்கள் நமக்கு சொல்லிக்கொடுத்த பல்வேறு பழக்கவழக்கங்களை மூடநம்பிக்கை என்று சொல்லும் நாம் அவர்கள் சொல்லிக்கொடுத்த பழக்கவழக்கங்களுக்கு பின்னால் இருக்கும் அறிவியல் உண்மையை ஆராய்ந்தால் ஒருகணம் அதிர்ச்சி ஆகிவிடுவோம்.

பூமியை மிகப்பெரிய காந்தம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். கிழக்கு மேற்காக சூரியனின் பாதை செல்கின்றது. வடக்கு தெற்காக காந்தப் பாதை செல்கின்றது. பூமியில் வடதுருவம் தென் துருவம் என்று இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன.

மனித உடலில் மூளையை வடக்கு என்றும் பாதத்தை தெற்கு என்றும் சொல்லலாம். இதனாலயே வடக்கே தலை வைத்துப் படுக்கும்போது, வடக்கில் காந்தமண்டலம் இருப்பதால், அது நம்முடைய மூளையில் உள்ள நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. இதனால்தான் தூங்கும்போது வடக்கே தலைவைத்து தூங்க கூடாது என்பதற்கான காரணம்.

அதேபோல் நாம் தெற்கு திசையில் தலை வைத்து, வடக்கு திசையில் கால் நீட்டி படுக்கும்போது, பூமியின் நேர்மின்னோட்டமானது மனிதனின் எதிர்மின்னோட்டத்துக்கு சீராக இருக்கும். இதனால் நமது உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.வடக்கே தலைவைத்து படுப்பதானல் மூளை சம்மந்தமான கோளாறுகள் வருவதாக கூறப்படுகிறது.

கிழக்கே தலைவைத்து தூங்கும்போது நேராமரை இந்த திசையில் இருந்து வரும் நேர்மறை ஆற்றல்கள், உடலுக்கு அனைத்து வகையான நேர்மறை ஆற்றலை வழங்குவதாகவும், இந்த திசையில் தூங்கினால் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறுவதோடு, எப்போதும் ஆற்றலுடன் சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.

மேற்கு திசையில் தலைவைத்து தூங்கினால் ஒவ்வொரு நாளும் வாழ்வில் ஒரு மாற்றத்தை காண முடியுமாம். அதேபோல இந்த திசையில் தலைவைத்து தூங்குபவர்களுக்கு பணக்காரர்களாகவும், பெயர் புகழுடன் வாழ்வதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.


Advertisement