உள்ளாடை இல்லாமல் உறங்குவதால் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இவ்வளவு நன்மைகளா.!

உள்ளாடை இல்லாமல் உறங்குவதால் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இவ்வளவு நன்மைகளா.!


benefits-of-sleeping-without-underwear-in-tamil

உறக்கம் என்பது மனிதர்களுக்கு மிகவும் தேவையான ஓன்று. சரியான உறக்கம் இல்லாததால் பலநேரங்களில் பலவிதமான நோய்களுக்கும், மன அழுத்தத்திற்கு ஆளாகவேண்டி உள்ளது. உறக்கம் எவ்வளவு முக்கியமோ, அதேபோல் நாம் உறங்கும்போது பயன்படுத்தும் உடைகளும் மிக முக்கியமானது.

அலுவலக வேலை முடிந்து வந்த கையோடு உடைகளை கூட மாற்றாமல் தூங்க செல்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அது மிகவும் தவறு. ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி இரவில் தூங்கும்போது மெலிதான ஆடைகளை அணிவதும், உள்ளாடைகள் இல்லாமல் உறங்குவதும் பலவிதங்களில் நன்மை தருகிறது.

health tips

பொதுவாக, ஆண்கள் ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடைகளை பயன்படுத்தும் போது அதில் இருந்து உருவாகும் வெப்பம் காரணமாக விந்தணு  உற்பத்தி குறைந்து குழந்தை  உண்டாவதிலும் பிரச்சனை ஏற்படுகிறது. அதுவே, மெலிதான ஆடைகளை பயன்படுத்தும்போது உடல் சூடு குறைந்து விந்தணு உற்பத்தி அதிகமாகிறது.

அதேபோல், பெண்களும் இரவில் தூங்கும் போது மெலிதான ஆடைகள் அல்லது, உள்ளாடைகள் இல்லாமல் தூங்குவது மிகவும் ஆரோக்கியமானது. உள்ளாடை இல்லாமல் தூங்குவதால் அதிக காற்றோட்டத்தால் நோய் தொற்று, அரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.