தேவையில்லாத அரசியலை ஏன் பேச வேண்டும்? விஜய் சேதுபதியை சாடிய அம்பிகா!
ரூ.3,400 கோடி சொத்து.. தெருவில் பிச்சை எடுத்த பாஜக எம்எல்ஏ.. இது தான் காரணமா?
மகாராஷ்டிர மாநிலம் காட்கோபர் கிழக்கு தொகுதி எம்எல்ஏ பராக் ஷா, ஒருநாள் பிச்சைக்காரர் வேடமிட்டு பொதுமக்களிடம் பிச்சை கேட்டும், அதன்மூலம் உணவு பெற்றும் அனுபவம் மேற்கொண்ட சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் காட்கோபர் கிழக்கு தொகுதி எம்எல்ஏ பராக் ஷாவுக்கு ரூ.3,400 கோடிக்கும் அதிகமான சொத்து இருப்பதாகக் கூறப்படுகிறது. ஜெயின் மதத்தின் சாத்துர்மாஸ் காலத்தில், பராக் ஷாவின் குருவான நம்ரமுனி, ஏழைகளின் வாழ்க்கைச் சூழலை நேரடியாகப் புரிந்துகொள்ள இதுபோன்ற அனுபவத்தை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.
இதையடுத்து தனது வழக்கமான பாதுகாப்பு, வசதிகள் உள்ளிட்டவற்றைத் துறந்து, மேக்கப் மூலம் பிச்சைக்காரர் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு அவர் பொதுமக்கள் மத்தியில் சென்றுள்ளார். தன்னை யாரும் அடையாளம் கண்டுகொள்ளாத வகையில் வேடமிட்ட பராக் ஷா, சாலையோரம் மற்றும் பொது இடங்களில் மக்களிடம் பிச்சை கேட்டதாகவும், கிடைத்த உணவைக் கொண்டு தனது பசியை போக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சூனியம் வைத்ததாக சந்தேகம்.. மருமகளை கோடரியால் தாக்கிய 70 வயது மாமனார்.. நாக்பூரில் அதிர்ச்சி!
அதன் பின்னர் தனது உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்திய அவர், தான் சந்தித்த நபர்களை மீண்டும் சந்தித்து இந்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்து கொண்டதாகக் கூறப்படும் ஒரு எம்எல்ஏ, பிச்சைக்காரராக மாறி மக்களிடம் உணவு கேட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகளை ஏற்படுத்தியுள்ளது.
ஒருபுறம், ஏழைகளின் வாழ்க்கையை அருகில் இருந்து புரிந்துகொள்ள அவர் மேற்கொண்ட முயற்சிக்கு பாராட்டுகள் கிடைத்து வரும் நிலையில், மறுபுறம் ஒரு நாள் அல்லது சில மணி நேர அனுபவத்தால் ஏழைகளின் முழுமையான வாழ்க்கைப் போராட்டத்தைப் புரிந்துகொள்ள முடியுமா என்ற விவாதமும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: கணவனை கொன்றுவிட்டு ரத்தத்தை நெற்றியில் திலகமிட்ட மனைவி.. மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்!