கணவனை கொன்றுவிட்டு ரத்தத்தை நெற்றியில் திலகமிட்ட மனைவி.. மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்!



Wife killed husband in Maharashtra

மகாராஷ்டிரா மாநிலத்தில் குடும்பத் தகராறு காரணமாக கணவனை, மனைவி கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்குப் பிறகு கணவனின் உடலைச் சிதைத்ததுடன், அவரது ரத்தத்தை நெற்றியில் திலகமிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் கணவன் தூங்கிக் கொண்டிருந்தபோது, கூர்மையான ஆயுதத்தால் மனைவி அவரைத் தாக்கியதாகவும், இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

maharashtra

இதையடுத்து, உயிரிழந்தவரின் உடலில் மேலும், காயங்களை ஏற்படுத்தியதுடன், உடல் உறுப்புகளை வெளியே எடுத்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், உடலில் இருந்து வெளியேறிய ரத்தத்தை நெற்றியில் திலகமாக இட்டுக்கொண்டு, சம்பவ இடத்திலேயே அந்தப் பெண் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சிறுவனிடம் அத்துமீறிய முத்தம்.. இளம்பெண் மீது பாய்ந்த வழக்கு!

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், சந்தேகத்தின் பேரில் மனைவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறில் ஏற்பட்ட ஆத்திரமே கொலைக்குக் காரணமா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: “சமையல் செய்ய மாட்டியா?” – மனைவியுடன் தகராறு.. மகாராஷ்டிராவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!