பரபரப்பு! பாஜக அலுவலகத்தில் இரவு முழுவதும் மண்டல தலைவர்கு நடந்த சித்திரவதை! பைப், தடி, பெல்ட்டால் அடித்து... கொடூர மிரட்டல்!!!



bjp-leader-sunil-assault-allegation-delhi

 

டெல்லியில் பாஜக மண்டலத் தலைவர் சுனில் மீது அக்கட்சியின் எம்.எல்.ஏ கஜேந்திர தாரால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வாக்காளர் பட்டியலை கொண்டு வருமாறு அழைக்கப்பட்ட சுனில், கட்சி அலுவலகத்தில் இரவு முழுவதும் அறையில் அடைத்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பைப், தடி மற்றும் பெல்ட்டுகளால் அவர் தாக்கப்பட்டதாகவும், சாதிய ரீதியிலான இழிவான வார்த்தைகளால் திட்டப்பட்டதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கட்சி அலுவலகத்தில் இரவு முழுவதும் சித்திரவதை?

வியாழக்கிழமை மாலை டெல்லி பாஜக அலுவலகத்திற்கு சுனில் வரவழைக்கப்பட்டுள்ளார். கூட்டம் நடைபெற இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அங்கு அவரை ஒரு அறைக்குள் அழைத்துச் சென்று கதவை பூட்டியதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். அதன் பின்னர் நீண்ட நேரம் அவரை தாக்கியதாகவும், அப்போது அலுவலகத்தில் இருந்த சிசிடிவி கேமராக்கள் அணைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பதவியும் இல்ல... மறியாதையும் இல்ல..! உண்மையை உடைத்த ராதிகா? சரத்குமாரின் அடுத்தக்கட்ட அரசியல் மூவ்...!!!

தாக்குதலில் சுனிலின் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது சகோதரர் விஜய் வெளியிட்டதாக கூறப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில், ஆடைகள் களையப்பட்ட நிலையில் சுனில் காயங்களுடன் காணப்படுகிறார். உடலின் சில பகுதிகளில் தோல் உரிந்து காயங்கள் ஏற்பட்டிருப்பதும் அதில் தெரிகிறது.

மருத்துவ அறிக்கையுடன் புகார்; எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை காலை சுனில் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். மருத்துவ அறிக்கை மற்றும் புகாருடன் காவல் நிலையத்தை குடும்பத்தினர் அணுகியதாகவும், ஆனால் இதுவரை எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

வழக்கை வாபஸ் பெற மிரட்டல் என குடும்பத்தினர் புகார்

இதற்கிடையே, எம்.எல்.ஏவின் ஆதரவாளர்கள் சுனிலின் வீட்டை முற்றுகையிட்டு வழக்கை வாபஸ் பெறுமாறு வற்புறுத்தி வருவதாக குடும்பத்தினர் கூறியுள்ளனர். இதனால் குடும்பத்தினர் அச்சத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுனில் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் கஜேந்திர தாரால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இதையும் படிங்க: சற்று முன்.... பாஜகவிலிருந்து விலகி தவெகவில் ஐக்கியம்..! பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சரத்குமார்! வெளியிட்ட பரபரப்பு பதிவு...!!!