சற்று முன்.... பாஜகவிலிருந்து விலகி தவெகவில் ஐக்கியம்..! பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சரத்குமார்! வெளியிட்ட பரபரப்பு பதிவு...!!!



sarathkumar-bjp-tvk-party-switch-rumours

பாஜகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் சரத்குமார் இணைய உள்ளதாக வெளியான தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இந்த நிலையில், பாஜகவின் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு சரத்குமார் எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவு, கட்சி மாறுவது குறித்த ஊகங்களுக்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதிய நிர்வாகிகளுக்கு சரத்குமார் வாழ்த்து

பாஜகவில் புதிதாக பொறுப்புகள் வழங்கப்பட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்து சரத்குமார் வெளியிட்ட எக்ஸ் பதிவு தற்போது அரசியல் கவனம் பெற்றுள்ளது. கட்சியை விட்டு விலகப் போவதாக தொடர்ந்து பேசப்பட்டு வந்த நிலையில், அவர் பாஜக நிர்வாகிகளை வெளிப்படையாக வாழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பதவியும் இல்ல... மறியாதையும் இல்ல..! உண்மையை உடைத்த ராதிகா? சரத்குமாரின் அடுத்தக்கட்ட அரசியல் மூவ்...!!!

கட்சி மாறும் வதந்திக்கு முற்றுப்புள்ளியா?

இந்த பதிவின் மூலம் சரத்குமார் கட்சி மாறுவது தொடர்பான வதந்திகளுக்கு மறைமுகமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தில் அவர் இணையப் போவதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில் இந்த பதிவு வெளியாகியிருப்பது விவாதத்தை மேலும் அதிகரித்துள்ளது.

புதிய பொறுப்பு கிடைக்காதது ஏன்?

அதே நேரத்தில், பாஜகவின் புதிதாக அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியலில் சரத்குமாரின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன. தொடர்ந்து கட்சியில் அவருக்கு புதிய பொறுப்பு வழங்கப்படாததற்கான காரணம் என்ன என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனிடையே, தமிழக வெற்றிக் கழகம் தொடர்பான வதந்திகளுக்கு சரத்குமார் தரப்பில் இருந்து அடுத்தகட்டமாக ஏதேனும் விளக்கம் வெளியாகுமா என்பதும் அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: ரூட்டை மாற்றின எடப்பாடி! ஒரே நாளில் 500 நிர்வாகிகளுக்குப் புதிய பதவி... அதிரும் அதிமுக அரசியல் களம்!!!