அதிர்ச்சி! கிராம திருவிழாவில் ஆசையாக நூடுல்ஸ் சாப்பிட்ட 118 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி! கதறும் பெற்றோர்.!!
மத்தியப் பிரதேச மாநிலம் பாலாகாட் மாவட்டத்தில் கிராமத் திருவிழாவில் நூடுல்ஸ் சாப்பிட்ட 118 குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நவம்பர் 21-ஆம் தேதி நடைபெற்ற விழாவில் உணவு சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே குழந்தைகளுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட குழந்தைகள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஹிர்ரி கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவில் விற்கப்பட்ட நூடுல்ஸை சாப்பிட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: காலம் கெட்டு போச்சு! 7 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்! கதறும் குடும்பம்... போராட்டத்தில் திரண்ட கிராம மக்கள்...!!!
118 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி
கிரணாபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹிர்ரி கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவில் நூடுல்ஸ் சாப்பிட்ட 118 குழந்தைகளும் முதலில் கிரணாபூரில் உள்ள சமூக நல மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட 45 குழந்தைகள் மேல் சிகிச்சைக்காக பாலாகாட் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அதே உணவைச் சாப்பிட்டு பாதிக்கப்பட்ட 12 பெரியவர்களும் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சமூக நல மையத்தில் சிகிச்சை பெற்ற மற்ற குழந்தைகள் உடல்நலம் தேறியதைத் தொடர்ந்து வீடு திரும்பினர்.
மருத்துவமனையில் ஆட்சியர் நேரில் ஆய்வு
குழந்தைகள் பாதிக்கப்பட்டது குறித்து தகவல் அறிந்த பாலாகாட் மாவட்ட ஆட்சியர் ஆதித்யா சிங், நவம்பர் 22-ஆம் தேதி காலை மாவட்ட மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தார். அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு மருத்துவர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
அனைவரும் அபாய கட்டத்தைத் தாண்டினர்
மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 45 குழந்தைகள் மற்றும் 12 பெரியவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி டாக்டர் சத்ருகன் சிங் தாஹியா தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட அனைவரும் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும், தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மக்களே உஷார்! ஹாஸ்பிடலில் கையில் வைத்திருந்த ஐபோன்... திடீரென வெடித்து சிதறி பரவிய தீ..! அருகே பிறந்த பிஞ்சு குழந்தை... பகீர் காட்சி...!!!