மக்களே உஷார்! ஹாஸ்பிடலில் கையில் வைத்திருந்த ஐபோன்... திடீரென வெடித்து சிதறி பரவிய தீ..! அருகே பிறந்த பிஞ்சு குழந்தை... பகீர் காட்சி...!!!
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள தனியார் கிளினிக் காத்திருப்பு அறையில், நோயாளி ஒருவர் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்துத் தீப்பற்றியது. இதனால் அங்கிருந்த நோயாளிகள் அலறியடித்து வெளியேறினர். கிளினிக் ஊழியர்கள் உடனடியாகச் செயல்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
கையில் இருந்த செல்போன் திடீரென வெடித்தது
குவாலியர் தட்டிபூர் பகுதியில் உள்ள திருஷ்டி கிளினிக்கில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அப்போது பலர் மருத்துவரைச் சந்திப்பதற்காகக் காத்திருப்பு அறையில் அமர்ந்திருந்தனர். அங்கு வந்த நோயாளி ஒருவர் தனது செல்போனைப் பயன்படுத்திக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அது திடீரென வெடித்துத் தீப்பற்றியது.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நபர், செல்போனை அருகில் இருந்த சோஃபா மீது தூக்கிப் போட்டுள்ளார். ஏற்கெனவே தீப்பற்றியிருந்த போனில் இருந்து சோஃபாவுக்கும் தீ பரவியது. இதனால் அறை முழுவதும் புகை சூழ்ந்தது.
குழந்தைகளுடன் இருந்த தாய்மார்கள் பதற்றம்
காத்திருப்பு அறையில் பிறந்த குழந்தைகளுடன் சில தாய்மார்களும் இருந்தன. திடீரென ஏற்பட்ட தீ மற்றும் புகையால் அங்கிருந்தவர்கள் பதற்றமடைந்து கூச்சலிட்டனர். பலர் உடனடியாக அறையை விட்டு வெளியேறினர்.
நிலைமையை உணர்ந்த கிளினிக் ஊழியர்கள் விரைந்து வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் தீ மேலும் பரவுவது தடுக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்
கிளினிக்கில் பதிவான சிசிடிவி காட்சிகளில் செல்போன் வெடித்ததும், அங்கிருந்தவர்கள் பதற்றத்துடன் வெளியேறுவதும் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
செல்போன் வெடித்ததற்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. பேட்டரி கோளாறு உள்ளிட்ட தொழில்நுட்பக் காரணங்கள் இருந்தனவா என்பது உறுதி செய்யப்படவில்லை.
मध्य प्रदेश के ग्वालियर में दृष्टि क्लिनिक (आई केयर क्लिनिक) में रविवार दोपहर एक मरीज का मोबाइल अचानक फट गया। आग लगने से अफरा-तफरी मच गई।
— Madan Mohan Soni (@madanmohansoni) November 2, 2026
मरीज वेटिंग एरिया में बैठा था। हाथ में मोबाइल चल रहा था। अचानक मोबाइल फट गया और आग लग गई। पास में एक महिला नवजात बच्चे के साथ बैठी थी। pic.twitter.com/MsE3f574g6
இதையும் படிங்க: என்னை ஏமாத்த பாக்குறியா..? உன்ன சும்ம விடமாட்டேன்! காதலன் வீட்டு மொட்டை மாடியில் ஏறி 21 வயது பெண் தற்கொலை மிரட்டல்! ஷாக் வீடியோ!!!