என்னை ஏமாத்த பாக்குறியா..? உன்ன சும்ம விடமாட்டேன்! காதலன் வீட்டு மொட்டை மாடியில் ஏறி 21 வயது பெண் தற்கொலை மிரட்டல்! ஷாக் வீடியோ!!!



kushinagar-woman-marriage-threat-lovers-roof

உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில், திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி காதலன் வீட்டின் கூரை மீது ஏறி 21 வயது பெண் தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் பல மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அந்தப் பெண்ணைப் பத்திரமாக மீட்டனர்.

இரண்டு ஆண்டுகளாக நீடித்த காதல்

ஹடா பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோபால் என்பவருடன் பழகத் தொடங்கியுள்ளார். திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து கோபால் தன்னுடன் காதல் உறவில் இருந்ததாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சாமி கும்பிட போன இடத்துல சாவு வந்துட்டே..! நவராத்திரி விழா பந்தலில் மின்சாரம் தாக்கி 7 வயது சிறுவன் துடிதுடித்து பலி..! நெஞ்சை உலுக்கும் சோகம்..!!!

ஆனால், திருமணம் குறித்து வற்புறுத்தியபோது கோபால் விலகிச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் மீது பாலியல் வன்கொடுமைப் புகாரும் அளித்துள்ளார்.

காதலன் வீட்டுக் கூரை மீது ஏறி மிரட்டல்

இந்த நிலையில், சனிக்கிழமை கோபாலின் வீட்டிற்குச் சென்ற அந்தப் பெண், கூரை மீது ஏறி நின்று தன்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில் கையை அறுத்துத் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் மிரட்டியுள்ளார்.

பெண்ணின் சத்தம் கேட்டு வீட்டின் முன்பு பொதுமக்கள் திரண்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது. தகவல் கிடைத்ததும் அங்கு வந்த போலீசார், அந்தப் பெண்ணிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பத்திரமாக மீட்ட போலீசார் விசாரணை

பல மணி நேர முயற்சிக்குப் பிறகு பெண்ணைச் சமாதானப்படுத்திய போலீசார், அவரைப் பாதுகாப்பாகக் கீழே இறக்கினர். இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

தற்போது காதலன் கோபால் மற்றும் அந்தப் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாலியல் வன்கொடுமைப் புகார் மற்றும் திருமணம் தொடர்பான பிரச்சினை குறித்து விசாரணைக்குப் பிறகே முழு விவரங்கள் தெரியவரும்.

 

இதையும் படிங்க: இந்த நிலைமை யாருக்கும் வர கூடாது! அவள் முகத்தை பார்க்க மாட்டேன்.! தட்டி கழித்த குடும்பம்! மார்ச்சுவரியில் உறைந்த தாயின் உடல்..! 72 மணி நேரத்துக்கு பிறகு உதவிக்கு வந்த இளைஞர்கள்... நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!!