தடுமாற்றத்தில் தவெக....! ப.சிதம்பரம், ப்ரவீன் சக்கரவர்த்தி இடையே பதவி போட்டி! CM விஜய்யின் இறுதி முடிவு என்ன? தவெகவுக்குள் வெடிக்கப்போகும் பூகம்பம்..!!!



praveen-chakravarty-tamil-nadu-finance-minister-post

தமிழகத்தில் தவெக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி தொடர்பான அமைச்சரவை விவாதங்கள் புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ப்ரவீன் சக்கரவர்த்தி, திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட்டு நிதி அமைச்சராக வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் கோரிக்கை தவெக தலைவர் விஜய்யிடம் முன்வைக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் கூட்டணிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிதி அமைச்சர் பதவிக்கு ப்ரவீன் சக்கரவர்த்தி விருப்பம்?

விஜய்யின் நண்பராகக் கருதப்படும் ப்ரவீன் சக்கரவர்த்தி, தமிழக அரசியலில் நேரடியாகக் களமிறங்க விரும்புவதாகக் காங்கிரஸ் வட்டாரங்களில் பேசப்படுகிறது. திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், நிதி அமைச்சர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதே அவரது விருப்பம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: 9 நிமிட வீடியோக்கு தவெக கொடுத்த தரமான பதிலடி! தமிழக அரசியலில் வெடித்த அடுத்த பூகம்பம்..!!!

இந்த அரசியல் நகர்வுகளுக்குப் பின்னால் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் வழிகாட்டுதல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவரும் தமிழக அரசியலில் நேரடிப் பங்களிப்புடன் நிதித்துறையைப் பெற திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, ப்ரவீன் சக்கரவர்த்தி முந்திக்கொண்டு விஜய்யிடம் தனது விருப்பத்தைத் தெரிவித்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாநிலங்களவை பதவியை இழக்க காங்கிரஸ் தயக்கமா?

இந்த விவகாரம் ராகுல் காந்தியின் சம்மதத்துடன் நகர்வதாகக் கூறப்பட்டாலும், ப்ரவீன் சக்கரவர்த்தி மூன்று மாதங்களுக்கு முன்புதான் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே, தற்போதைய பதவியை அவர் விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்கு காங்கிரஸ் மேலிடம் ஒப்புதல் அளிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஒருவேளை விஜய் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால், தவெகவுக்குள்ளும் சலசலப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது நிதி அமைச்சராக இருக்கும் நா. மரிய வில்சன், விஜய்யின் நம்பிக்கைக்குரியவராக இருப்பதால் அவரிடமிருந்து அந்தப் பொறுப்பு மாற்றப்படுவது கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது.

நிதித்துறையை காங்கிரஸுக்கு வழங்குவதில் தவெகவுக்கு சிக்கல்

அரசின் நிதி ஒதுக்கீடு, மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் முக்கிய பொருளாதார முடிவுகளில் நிதித்துறைக்கு முக்கியப் பங்கு உள்ளது. அத்தகைய துறையை கூட்டணிக் கட்சியான காங்கிரஸிடம் ஒப்படைப்பது தவெகவின் அதிகாரப் பகிர்வு குறித்த அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

குறிப்பாக, மாநில சுயாட்சியை முக்கியக் கொள்கையாக முன்வைக்கும் தவெக, முக்கியமான நிதித்துறையை மற்றொரு கட்சிக்கு வழங்கினால் அது கட்சியின் கொள்கை நிலைப்பாடு தொடர்பான கேள்விகளை எழுப்பலாம். அதே நேரத்தில், மரிய வில்சனிடமிருந்து பொறுப்பை மாற்றுவது கட்சிக்குள் அதிருப்தியை உருவாக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. ப்ரவீன் சக்கரவர்த்தியின் கோரிக்கை குறித்து விஜய் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் முக்கியக் கேள்வியாக உள்ளது.

 

இதையும் படிங்க: எச்சரித்த உளவுத்துறை... தாராபுரத்தில் இறங்கி அடித்த முதல்வர் விஜய்! பின்னணியில் இருக்கும் ரகசியம்..!!!