மனுஷனே இல்லையா நீ... அப்புறம் எப்படி அப்பா.? உடல் எடையை குறைக்க 6 வயது மகனை ட்ரெட்மில்லில் ஓட வைத்து சித்திரவதை செய்த தந்தை! இறுதியில் நடந்த அதிர்ச்சி... கண்கலங்க வைக்கும் காட்சி!!!



new-jersey-father-25-years-prison-child-death

அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தில், உடல் எடையைக் குறைக்க வேண்டும் எனக் கூறி 6 வயது மகனை ட்ரெட்மில்லில் ஓடவைத்து துன்புறுத்திய தந்தைக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறுவன் பலமுறை கீழே விழுந்தும் அவனைத் தொடர்ந்து ஓட வைத்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளான். இந்த வழக்கில் கண்காணிப்பு கேமரா காட்சிகளும் முக்கிய ஆதாரமாக இடம்பெற்றன.

ட்ரெட்மில்லில் தொடர்ந்து ஓடவைக்கப்பட்ட சிறுவன்

நியூஜெர்சியின் பார்கட் பகுதியில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் கிறிஸ்டோபர் கிரிகோர் என்பவர் தனது 6 வயது மகன் கோரி மைசியோலோவை ட்ரெட்மில்லில் ஓட வைத்துள்ளார். சிறுவன் அதிக உடல் எடையுடன் இருப்பதாகக் கூறி, ட்ரெட்மில்லின் வேகத்தை அதிகரித்து ஓடச் செய்துள்ளார்.

இதையும் படிங்க: ஐயோ... புள்ள பாவம்! தொண்டையில் சிக்கிய உணவு... மூச்சுதிணறலிலும் உதவி கேட்டு ஓடிய 8 வயது சிறுமி! பள்ளிஆசிரியரின் அலட்சியத்தால் பறிபோன உயிர்.... ஷாக் வீடியோ..!!!

அப்போது சிறுவன் நிலைதடுமாறி மீண்டும் மீண்டும் கீழே விழுந்துள்ளான். ஆனாலும் தந்தை அவனை ஓய்வெடுக்க விடாமல் மீண்டும் ட்ரெட்மில்லில் ஏற்றி ஓட வைத்துள்ளார். மேலும், சிறுவனைத் துன்புறுத்தும் காட்சிகளும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தன.

சிகிச்சை பலனின்றி உயிரிழந்த 6 வயது கோரி

உடற்பயிற்சிக் கூடத்தில் நடந்த நிகழ்வுகளுக்குப் பிறகு சிறுவனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். ஆனால், சிகிச்சை பலனின்றி கோரி உயிரிழந்தான்.

இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது, உடற்பயிற்சிக் கூடத்தில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகள் நீதிமன்றத்தில் திரையிடப்பட்டன. அதை பார்த்த சிறுவனின் தாய் கதறி அழுதுள்ளார்.

தந்தைக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

வழக்கை விசாரித்த நியூஜெர்சி நீதிமன்றம், சிறுவனின் உயிரிழப்புக்குக் காரணமான செயல்களைக் கருத்தில் கொண்டு கிறிஸ்டோபர் கிரிகோருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. 6 வயது சிறுவனின் உயிரிழப்பு தொடர்பான இந்த வழக்கு அமெரிக்காவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

 

இதையும் படிங்க: போதையில் இளைஞர் செய்த கொடூரம்! தாயை வீட்டுக்குள் பூட்டிய... தெருவில் கேஸ் சிலிண்டருக்கு தீ வைப்பு! நொடியில் வெடித்து சிதறிய உயிர்... ஷாக் வீடியோ!