அடக்கடவுளே...! சாவு தான் தீர்வா..? 2 சகோதரிகள் தங்களது 4 குழந்தைகளுடன் எடுத்த விபரீத முடிவு....! அதில் ஒரு சகோதரி 8 மாத கர்ப்பிணி வேற... நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்...!!!



madhya-pradesh-sisters-four-children-well-death

மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில் இரண்டு சகோதரிகள் தங்களது நான்கு குழந்தைகளுடன் கிணற்றில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 8 மாத கர்ப்பிணியான அஞ்சலியும் அவரது 6 வயது மகனும் உயிரிழந்தனர். மற்றொரு சகோதரியான சீதா தனது மூன்று குழந்தைகளுடன் உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவரை இழந்த ஒன்றரை மாதத்தில் அஞ்சலி உயிரிழப்பு

35 வயதான அஞ்சலி, தனது 6 வயது மகனுடன் கிணற்றில் குதித்ததாகக் கூறப்படுகிறது. அவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் அவரது கணவர் உயிரிழந்தார். கணவரை இழந்த துயரத்தில் அஞ்சலி கடுமையான மன உளைச்சலில் இருந்ததாகத் தெரிகிறது.

இதையும் படிங்க: வெறும் 200 ரூபாய்க்கு ₹50 லட்சம் மதிப்பில் கிடைத்த பிரம்மாண்ட ஃபார்ச்சூனர் கார்! பாட்டியால் பேரனுக்கு கிடைத்த அதிஷ்ட பரிசு..!!!

மூன்று குழந்தைகளுடன் உயிரிழந்த மூத்த சகோதரி

வேறு கிராமத்தில் வசித்து வந்த அஞ்சலியின் மூத்த சகோதரி சீதா (40), தனது குழந்தைகளான ராக்கி (14), பிரியங்கா (11), ஷ்லோக் (6) ஆகியோருடன் கிணற்றில் உயிரிழந்துள்ளார். இரண்டு சகோதரிகளும் நான்கு குழந்தைகளும் உயிரிழந்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரின் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

போலீசார் விசாரணை

தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், ஆறு பேரின் உடல்களையும் மீட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இரு சகோதரிகளும் இந்த முடிவை எடுக்க என்ன காரணம், சம்பவத்துக்கு முன்பு என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. குடும்பத்தினர் மற்றும் கிராம மக்களிடம் போலீசார் தகவல்களைச் சேகரித்து வருகின்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்தது சிவபுரி மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கணவரை இழந்த துயரத்தில் இருந்த அஞ்சலி 8 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: பிறந்தநாள் கொண்டாட்ட கேக்கில் முகத்தை அழுத்தியாதால் நடந்த அதிர்ச்சி...! துடித்துடித்த இளம்பெண்... ஷாக் வீடியோ..!!!