வெறும் 200 ரூபாய்க்கு ₹50 லட்சம் மதிப்பில் கிடைத்த பிரம்மாண்ட ஃபார்ச்சூனர் கார்! பாட்டியால் பேரனுக்கு கிடைத்த அதிஷ்ட பரிசு..!!!



six-year-old-wins-toyota-fortuner-lottery

வெறும் ரூ.200 கொடுத்து வாங்கிய குலுக்கல் சீட்டுக்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் பரிசாகக் கிடைத்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் புர்ஹான்பூரைச் சேர்ந்த 6 வயது சிறுவன் மாதனேஷ் ராய்க்வார் பெயரில் இந்தப் பரிசு விழுந்துள்ளது. சிறுவனின் பாட்டி கடந்த ஆண்டு வாங்கிய சீட்டுக்கு தற்போது முதல் பரிசு கிடைத்திருப்பது குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பேரக்குழந்தையின் பெயரில் வாங்கிய சீட்டு

கடந்த ஆண்டு நவராத்திரி விழாவின்போது நடைபெற்ற கர்பா கொண்டாட்ட நிகழ்ச்சியில், மாதனேஷின் பாட்டி ரூ.200 கொடுத்து குலுக்கல் சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார். அந்தச் சீட்டைத் தனது பேரக்குழந்தையின் பெயரிலேயே பதிவு செய்துள்ளார். அப்போது இந்தச் சீட்டுக்கு இவ்வளவு பெரிய பரிசு கிடைக்கும் என்று குடும்பத்தினர் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.

இதையும் படிங்க: நீங்க இங்க இருங்க! சாமி கும்பிட்டுட்டு வர்றேன்.... கோவிலுக்குள் சென்ற கொஞ்ச நேரத்தில் கணவன் குடும்பத்துக்கு காத்திருந்த அதிர்ச்சி..! மருமகளின் மாயாஜாலம்... பரபரப்பு பின்னணி..!!!

ரூ.50 லட்சம் மதிப்புள்ள ஃபார்ச்சூனர் கார்

தற்போது நடைபெற்ற குலுக்கலில் மாதனேஷ் ராய்க்வார் பெயருக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. அதன்படி, சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) கார் அவருக்குப் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிய தொகையில் வாங்கிய சீட்டுக்கு இவ்வளவு பெரிய பரிசு கிடைத்த செய்தி, அந்தப் பகுதியில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஆறு வயது சிறுவனின் பெயரில் சொகுசு கார் பரிசாக விழுந்த தகவல் சமூக வலைதளங்களிலும் பேசப்பட்டு வருகிறது. 

 

இதையும் படிங்க: அர்ணாப் புயலின் ராட்சத அலைகள்..! சல்பர் மூட்டைகளுடன் தரைத்தட்டி தத்தளிக்கும் பிரம்மாண்ட கப்பல்..! வைரலாகும் புயலின் தாக்கம்..!!!