காலம் கெட்டு போச்சு! 7 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்! கதறும் குடும்பம்... போராட்டத்தில் திரண்ட கிராம மக்கள்...!!!



madhya-pradesh-seven-year-old-girl-murder

மத்தியப் பிரதேச மாநிலம் மண்டசூர் மாவட்டத்தில், 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரோத் தாலுகாவுக்கு உட்பட்ட லுக்கா கிராமத்தில் நடந்த இந்தக் கொடூரச் சம்பவத்தைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குற்றவாளியை விரைவாகக் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

குற்றவாளிக்கு கடும் தண்டனை கோரி மக்கள் போராட்டம்

சிறுமி கொலை செய்யப்பட்ட தகவல் வெளியானதும் கிராம மக்கள் மத்தியில் கடும் சோகமும் ஆத்திரமும் ஏற்பட்டது. இதையடுத்து, சம்பவத்தைக் கண்டித்து அவர்கள் போராட்டத்தில் இறங்கினர். குற்றவாளியை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும், விசாரணையில் எவ்வித பக்கச்சார்பும் இருக்கக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: மக்களே உஷார்! ஹாஸ்பிடலில் கையில் வைத்திருந்த ஐபோன்... திடீரென வெடித்து சிதறி பரவிய தீ..! அருகே பிறந்த பிஞ்சு குழந்தை... பகீர் காட்சி...!!!

விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்க வலியுறுத்தல்

பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. இதற்காக வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

சிறுமியின் படுகொலை அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வழக்கில் விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலுத்து வருகிறது.

 

இதையும் படிங்க: அடக்கடவுளே...! சாவு தான் தீர்வா..? 2 சகோதரிகள் தங்களது 4 குழந்தைகளுடன் எடுத்த விபரீத முடிவு....! அதில் ஒரு சகோதரி 8 மாத கர்ப்பிணி வேற... நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்...!!!