வயல்வெளிக்கு சென்ற 15 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்! மயக்க மருந்து கொடுத்து விற்கப்பட்டு... 3 மாதத்துக்கு பின் வெளிவந்த அதிர்ச்சி! பகீர் பின்னணி...!!!
பீகார் மாநிலம் பாகல்பூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி கடத்தப்பட்டு, ராஜஸ்தானில் ரூ.2 லட்சத்துக்கு விற்கப்பட்டு கட்டாயத் திருமணம் செய்யப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. சுமார் மூன்று மாதங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமி, தந்தைக்குத் ரகசியமாகத் தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து போலீசார் அவரை மீட்டுள்ளனர். சிறுமியை விலைக்கு வாங்கியதாகக் கூறப்படும் 34 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மயக்க மருந்து கொடுத்து சிறுமி கடத்தல்
கடந்த ஜூலை 20-ம் தேதி வீட்டில் தாய் திட்டியதால் மனமுடைந்த சிறுமி, வீட்டை விட்டு வெளியேறி வயல்வெளிக்குச் சென்றுள்ளார். அப்போது கிராமத்தைச் சேர்ந்த பரஸ்மணி என்ற பெண், சிறுமிக்கு மயக்க மருந்து கலந்த உணவைக் கொடுத்து கடத்தியுள்ளார். மறுநாள் ராஜஸ்தானில் கண்விழித்த சிறுமி, தனக்கு என்ன நடந்தது என்பது தெரியாமல் தவித்துள்ளார். பின்னர் அங்குள்ள ஒரு வீட்டில் அவர் அடைத்து வைக்கப்பட்டதாக போலீசில் அளிக்கப்பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நல்ல வேலை.. ஏதோ புருஞ்சுருக்கு! சாதாரணமாக நடந்த விஷயம்.. ஆனால் சிசிடிவி காட்சிகளைப் பார்த்ததும் கண்ட அதிர்ச்சி! வைரலாகும் மர்ம வீடியோ...!!!
தந்தைக்கு ரகசியமாகத் தகவல்; போலீசார் மீட்பு
சுமார் மூன்று மாதங்களாக வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமி, அக்டோபர் 20-ம் தேதி கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி தனது தந்தையைத் தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார். தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து அவர் தெரிவித்ததையடுத்து, தந்தை போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் பீகார் மாநில பாகல்பூர் போலீசாரும், ராஜஸ்தானின் பிகானேர் உள்ளூர் போலீசாரும் இணைந்து சோதனை நடத்தி சிறுமியைப் பத்திரமாக மீட்டனர். அவரை ரூ.2 லட்சத்துக்கு வாங்கி கட்டாயத் திருமணம் செய்ததாகக் கூறப்படும் மன்பூல் கோதாரா (34) கைது செய்யப்பட்டார்.
மேலும் சிறுமிகள் கடத்தப்பட்டார்களா?
சிறுமியைக் கடத்திச் சென்றதாகக் கூறப்படும் பரஸ்மணி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, அதே பகுதியைச் சேர்ந்த மேலும் 3 முதல் 4 சிறுமிகள் கடத்தப்பட்டு ராஜஸ்தானில் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் பின்னணியில் சிறுமிகளைக் கடத்தி விற்பனை செய்யும் கும்பல் செயல்படுகிறதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர்.