ரூட்டை மாற்றின எடப்பாடி! ஒரே நாளில் 500 நிர்வாகிகளுக்குப் புதிய பதவி... அதிரும் அதிமுக அரசியல் களம்!!!



trichy-aiadmk-new-office-bearers-edappadi-palanisamy

திருச்சி மாநகர் மற்றும் மாவட்ட அதிமுகவில் அடுத்தடுத்து நிர்வாகிகள் மாற்றுக்கட்சிகளுக்கு சென்றதால் ஏற்பட்ட தொய்வை சரிசெய்யும் வகையில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். பல்வேறு துணை அமைப்புகள் மற்றும் பகுதி, வட்ட அளவிலான பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக சுமார் 500 பேருக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

துணை அமைப்புகளுக்கு புதிய நிர்வாகிகள்

திருச்சி மாநகர அதிமுகவில் எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, இளைஞர் அணி, அண்ணா தொழிற்சங்கம், மாணவர் அணி, மகளிர் பாசறை, இலக்கிய அணி உள்ளிட்ட துணை அமைப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே முக்கியப் பொறுப்புகள் நிரப்பப்பட்டிருந்த நிலையில், கட்சியின் கள அமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: திடீர் திருப்பம்.... அதிமுக -வில் இருந்து விலகி தவெக- வில் CM விஜய் முன்னிலையில் இணைந்த முக்கிய புள்ளி!!!

சுமார் 500 பேருக்கு கட்சிப் பொறுப்பு

சிந்தாமணி, மலைக்கோட்டை, காந்தி மார்க்கெட், கருமண்டம், காஜாமலை, பொன்னகர், பாலக்கரை, உறையூர், தில்லைநகர், அண்ணா நகர், புத்தூர் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் வட்டங்களில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் திருச்சி மாநகர் அதிமுகவில் களப்பணியை தீவிரப்படுத்தி, தொண்டர்களை ஒருங்கிணைக்கும் முயற்சிக்கு வேகம் கொடுக்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள், பெண்களுக்கு முன்னுரிமை

வரும் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை வலுவான அமைப்புடன் எதிர்கொள்ளும் நோக்கத்திலும் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு கணிசமான அளவில் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய நிர்வாகிகள் மூலம் தொண்டர்களை நேரடியாக களத்தில் ஒருங்கிணைத்து தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

மாற்றுக்கட்சிகளுக்கான நிர்வாகிகள் நகர்வால் ஏற்பட்டிருந்த சுணக்கத்தை போக்கி, திருச்சி மாவட்டத்தில் கட்சியின் அமைப்பை மீண்டும் வலுப்படுத்தும் முயற்சியாக இந்த நியமனங்கள் பார்க்கப்படுகின்றன. புதிய பொறுப்பாளர்களின் களப்பணி, திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அரசியலில் அதிமுகவின் அடுத்த கட்ட நகர்வுக்கு முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: இந்த காரணத்திற்காக தான் தவெக - வுக்கு ஆதரவு கொடுத்தோம்! இனி அந்த ஆதரவு கிடையாது! எஸ்.பி. வேலுமணி சொன்ன அதிர்ச்சி உண்மை..!!!