திடீர் திருப்பம்.... அதிமுக -வில் இருந்து விலகி தவெக- வில் CM விஜய் முன்னிலையில் இணைந்த முக்கிய புள்ளி!!!
அதிமுகவில் இருந்து விலகிய சிங்கை ராமச்சந்திரன், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். தவெக தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார். 2024 மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டவர் சிங்கை ராமச்சந்திரன். அவரது கட்சி மாற்றம் தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
அதிமுகவில் இருந்து விலகிய சிங்கை ராமச்சந்திரன்
சிங்கை ராமச்சந்திரன் அதிமுகவின் ஐடி விங் மாநில செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். கடந்த 2024ஆம் ஆண்டு கோவை மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளராக களமிறங்கினார். இந்த நிலையில், கடந்த மாதம் 23ஆம் தேதி அதிமுகவில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.
இதையும் படிங்க: ரூ.35 கோடி பேரத்தில் கைதாகி... சிறையில் இருந்து வெளிவந்த திருநாவுக்கரசு சொன்ன அடுக்கடுக்கான பகீர் உண்மை...!!!
தனது விலகல் குறித்து வெளியிட்ட அறிக்கையில், கோபம், வருத்தம் அல்லது தனிப்பட்ட எதிர்பார்ப்பு நிறைவேறாதது போன்ற காரணங்களால் இந்த முடிவை எடுக்கவில்லை என்றும், தனது மனசாட்சிக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே கட்சியில் இருந்து வெளியேறுவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், கடந்த சில மாதங்களாக கட்சிக்குள் நடைபெற்ற சில நிகழ்வுகள் தனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்
அதிமுகவில் இருந்து விலகிய சில வாரங்களிலேயே சிங்கை ராமச்சந்திரன் தனது அடுத்த அரசியல் நகர்வை அறிவித்துள்ளார். சிங்கை ராமச்சந்திரன் தவெக தலைவர் விஜயை சந்தித்து, அவரது முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜயை சந்தித்ததாகவும், அவரது முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கட்சிப் பயணத்தில் அனைவரின் ஆதரவையும் ஆசீர்வாதங்களையும் நாடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தவெகவில் தொடரும் அரசியல் இணைப்புகள்
சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் நகர்வுகள் கவனம் பெற்று வருகின்றன. அந்த வரிசையில் அதிமுகவின் முன்னாள் ஐடி விங் மாநில செயலாளராக இருந்த சிங்கை ராமச்சந்திரன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பது அக்கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Met the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay @CMOTamilnadu , and joined Tamilaga Vetri Kalagam @TVKVijayHQ in his presence. I seek your support and blessings. 🙏
— Singai G Ramachandran (@SingaiGR) August 11, 2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு C. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து, அவரது… pic.twitter.com/1fePzSvzIe
இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட்... தவெகவில் விஜயபாஸ்கருக்கு கிடைத்த பதவியால் மோதிக்கொள்ளும் புள்ளிகள்! புதுக்கோட்டையில் கிளம்பிய புதிய கோஷ்டி கணக்கு...!!!