பட்டினப்பாக்கம் புதிய தலைமை செயலகம் திட்டத்திற்கு வந்த சிக்கல்.. திருமாவளவன் பரபரப்பு கருத்து!



Thirumavalavan speech about new assembly building

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அத்திட்டத்திற்கு அப்பகுதி மக்களின் ஒப்புதல் அவசியம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் அலுவலக வளாகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் அறிவித்திருந்தார். இதற்காக தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட மொத்தம் 26.36 ஏக்கர் பரப்பளவு பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மக்களின் ஒப்புதல் இல்லாமல் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த முடியாது. பரந்தூர் விமான நிலையத் திட்டத்துக்கும் இதே நிலைப்பாடுதான். அதேபோல், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தையும் அப்பகுதி மக்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே செயல்படுத்த வேண்டும் என் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: “கைவிடாவிட்டால் மாபெரும் போராட்டம்!”.. புதிய தலைமைச் செயலக திட்டத்துக்கு சீமான் எச்சரிக்கை!

முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்த விமர்சனங்கள் தொடர்பாக பேசிய அவர், பயணம் முழுமையாக நிறைவடைந்த பிறகே அது குறித்து கருத்து தெரிவிக்க முடியும் என கூறினார். மேலும், இடைத்தேர்தலில் மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பணியாற்றும் என்றும், இடதுசாரிக் கட்சிகள் தனித்துப் போட்டியிடுவது அவர்களின் உரிமை என்றும், அதனால் கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படாது என நம்புவதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: “கைவிடாவிட்டால் மாபெரும் போராட்டம்!”.. புதிய தலைமைச் செயலக திட்டத்துக்கு சீமான் எச்சரிக்கை!