“சமையல் செய்ய மாட்டியா?” – மனைவியுடன் தகராறு.. மகாராஷ்டிராவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!



Husband killed wife for cooking

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், உணவு சமைக்காத மனைவியை கணவர் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாக்பூரின் ஜிஙாபாய் தக்லி பகுதியில் வசித்து வந்த யாமினி கிருஷ்ண லால் யாதவ் (38) என்பவருக்கும் அவரது கணவர் கிருஷ்ண லால் யாதவ் (41) என்பவருக்கும் இடையே கடந்த வியாழக்கிழமை இரவு தகராறு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வந்த கிருஷ்ண லால், மனைவியிடம் தனக்கும் குழந்தைகளுக்கும் உணவு தயார் செய்து தருமாறு கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், யாமினி கணேஷ் விழாவுக்கான நடனப் பயிற்சிக்கு செல்ல வேண்டியிருந்ததால் உணவு தயாரிக்க மறுத்ததாகவும், இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: குடிகார மகனின் கொடுமை.. பெற்றோர், சகோதரன் சேர்ந்து செய்த கொடூர சம்பவம்!

Cooking problem

வாக்குவாதம் முற்றிய நிலையில், கிருஷ்ண லால் மனைவியை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், அவரை கழுத்தை நெரித்ததுடன், கைகளால் தாக்கி படுக்கையில் தள்ளியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து மயக்கமடைந்த யாமினியை கணவர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முதலில் யாமினியின் மரணம் தொடர்பாக போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கழுத்துப் பகுதியில் கடுமையான காயம் உள்ளிட்ட பலத்த காயங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி, கணவர் கிருஷ்ண லாலை கைது செய்து கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர். 

இதையும் படிங்க: இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் விபரீதம்.. 14 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை.!