வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள விதிமுறைகள் என்னென்ன?.. இதோ விபரம்.!



rules-for-surrogacy

யாவருக்கும் குழந்தையின்மை என்ற நிலையினை போக்க மருத்துவ தொழில்நுட்ப வசதிகளின் அறிமுகத்திற்கு பின்னர் வாடகைத்தாய் முறை கொண்டு வரப்பட்டது. பெண் மற்றொரு பெண்ணுக்காக தனது கர்ப்பப்பையில் குழந்தையை பெற்றெடுத்து வழங்குகிறார்.

இவை உடல் ரீதியாக குழந்தையை பெற்றெடுக்க இயலாத பெற்றோருக்காக கொண்டு வரப்பட்டது. இந்த முறையில் மரபியல் தாய், கருசுமக்கும் தாய் என்ற இரண்டு முறைகள் இருக்கின்றன. வாடகைதாயின் கருமுட்டை கருவுருவாக்கத்தின்போது உதவி இருக்கும் பட்சத்தில், அவர் மரபியல் தாய் ஆவார். 

பெண்ணின் கருமுட்டை ஆணிடம் விந்து பெறப்பட்டு கருவூட்டப்பட்ட பின் வாடகை தாயின் கர்ப்பப்பைக்குள் வைக்கப்பட்டால் அது கரு சுமக்கும் தாய் ஆகும். இந்த விஷயத்தில் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க வாடகைத்தாய் ஒழுங்குமுறை சட்டம் 2021ல் கொண்டு வரப்பட்டது.

health tips

அதன்படி தம்பதிகள் திருமணம் முடிந்து 5 ஆண்டுகளை கடந்திருக்க வேண்டும், குழந்தை பெற இயலாததற்கான சான்றிதழ் சரிபார்க்கப்படவேண்டும், வாடகை தாயாக குழந்தை பெற விரும்பும் பெண் தம்பதியின் உறவினராக இருத்தல் வேண்டும், அவர் திருமணம் ஆகி குழந்தை பெற்றவராக இருக்க வேண்டும் என்பன அவற்றின் சட்டங்கள் ஆகும்.

அதே நேரத்தில் தன்பாலின ஈர்ப்பாளர்கள், மனைவி அல்லது கணவன் இன்றி தனித்து வாழ்பவர்கள், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் நபர்கள் ஆகியோர் வாடகைத்தாய் குழந்தை மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள தடை இருக்கிறது.