பரவிய வதந்தியால் பின்னடைவு.! உடைந்த உண்மையால் மீண்டும் கெத்தாக முதலிடத்தில் நடிகை நயன்தாரா!
பரவிய வதந்தியால் பின்னடைவு.! உடைந்த உண்மையால் மீண்டும் கெத்தாக முதலிடத்தில் நடிகை நயன்தாரா!

தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக கொடிகட்டி பறப்பவர் நடிகை நயன்தாரா. இந்த நிலையில் சரவணா ஸ்டோர்ஸ் அருள் சரவணன் நடிப்பில் வெளிவந்த ’தி லெஜண்ட்’ திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரெளட்டாலாவிற்கு ரூ.20 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக பல ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது.
இந்த நிலையில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த நயன்தாரா பின்னுக்குத் தள்ளப்பட்டார். ஆனால் ஊர்வசி தரப்பினர் இந்த தகவலை மறுத்துள்ளனர். ஆனால் தி லெஜெண்ட் படத்தில் நடித்ததற்காக நல்ல சம்பளம் கொடுக்கப்பட்டது எனவும் கூறியுள்ளனர்.
அதனை தொடர்ந்து நயன்தாராவை விட குறைவான சம்பளமே ஊர்வசி ரெளட்டாலாவிற்கு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தமிழில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை பட்டியலில் தொடர்ந்து நயன்தாராவே முதலிடத்தில் உள்ளார் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் ஊர்வசிக்கு ரூ.7 முதல் 8 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கலாம் எனவும் தகவல்கள் பரவி வருகிறது.