நிலவுக்கே சென்ற மனித சக்தியால் இந்த இடத்திற்கு மட்டும் செல்லவே முடியாதாம்! எந்த இடம் தெரியுமா?

நிலவுக்கே சென்ற மனித சக்தியால் இந்த இடத்திற்கு மட்டும் செல்லவே முடியாதாம்! எந்த இடம் தெரியுமா?



World most dangerous ocean challenger deep

விஞ்ஞான வளர்ச்சியில் அணைத்து நாடுகளும் அபார முன்னேற்றம் அடைந்துள்ளது. பூமியை போன்று வேறு எங்கையாவது மனிதர்கள் வாழ்கிறார்கள்? வேறு பூமி, சூரியன் போன்றவை உள்ளதா என நாளுக்கு நாள் அது சம்மந்தமான ஆராய்ச்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. மேலும் செவ்வாய் கிரகத்தில் மனிதனால் வாழ முடியுமா என்றும் ஆரய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.


இவ்வாறு பூமியை விட்டு வேறு கோள்களுக்கு சென்ற மனிதர்களால், இதுவரை இந்த இடத்திற்கு மட்டும் செல்லவே முடியவில்லை என்பது ஆச்சர்யமான ஓன்று. சேலஞ்சர் டீப் என்ற பகுதி உலகிலே அதிகமான ஆழம் கொண்ட கடல் பகுதி. சராசரியாக கடலின் ஆழம் 4 கி.மீ. வரைதான் இருக்கும். ஆனால், இந்த பகுதியில் மட்டும் கிட்டத்தட்ட 11 கி.மீ. வரை கடலின் ஆழம் உள்ளதாம்.

challenger deep

அதிகப்படியான கடல் நீரின் அழுத்தம் காரணமாகவே மனிதனால் இந்த இடத்திற்குச் செல்ல முடியவில்லை என்று கூறப்படுகிறது. பொதுவாக கடலில் 10 மீட்டர் ஆழத்திற்கு சென்றால் கடல் நீரின் அழுத்தம் 2 மடங்கு இருக்கும். அதுவே 20 மீட்டர் என்றால் 3 மடங்கு இருக்கும். அதேபோல் 30 மீட்டர் ஆழத்தில் 4 மடங்கும், 4 கி.மீ. கடல் ஆழத்தில் 400 மடங்கும் கடல் நீரின் அழுத்தம் இருக்கும்.

இந்த அழுத்தமானது நம்மை படுக்க வைத்து நம் மேல் சுமார் 50 சிமெண்ட் மூடைகளை மேலே அடுக்குவது போல் அழுத்தம் கொண்டது. இதுவே 10,000 மீட்டர் ஆழத்தில் 1,100 மடங்கு இருக்கும். அப்படியானால் அந்த இடத்தில் மனிதனின் உடலை நீர் ஊடுருவிச் செல்லும். இதனால் மரணம் ஏற்படும். மேலும் கடலில் 800 மீட்டர் ஆழத்திலே இருள் சூழ்ந்து இருப்பதால் எதையும் நம்மால் பார்க்க முடியாது.