கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிச்சாச்சா? அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவால் எதிர்பார்ப்பு!



trumb talk about corona

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது பல நாடுகளில் தீவிரமாக பரவி உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசால் உலக நாடுகளில் இதுவரை 8228க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு,  தீவிரமாக  கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் உலக அளவில் பரவாமல் இருப்பதற்காக சுகாதாரத்துறை பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் பல நாடுகளில் இந்த கொடூர வைரஸின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.  இந்தியாவில் கொரோனாவிற்கு 3 பேர் பலியாகியுள்ள நிலையில், நாடு முழுவதும் 152 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் அணைத்து நாடுகளிலும் தீவிர பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

corona

அமெரிக்காவில் 50 மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அந்த நாட்டில் பலி எண்ணிக்கை 100-யை கடந்து 116 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் பாதித்தோரின் எண்ணிக்கையும் 6 ஆயிரத்து 524ஆக அதிகரித்துள்ளது.

உலக முழுவதும் கொரோனா வைரஸிற்கு எதிராக  தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் பல நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். கொரோனா தடுப்பு மருந்தை யார் கண்டுபிடிப்பது என்ற போட்டியும் நிலவி வருகிறது. அதிலும் ஜெர்மனி-அமெரிக்காவிடையே  அதிகமாக நிலவி வருகிறது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவீட்  செய்து உள்ளார். ஒரு வேளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டு பிடிக்கப்பட்டு உள்ளதாக டிரம்ப் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.