போன் வந்துச்சு.. வீடு சுத்தம் செய்ய பக்கெட்டுடன் சென்ற பெண்.. சென்ற இடத்தில் காத்திருந்த இன்ப அதிர்ச்சி..



Struggling cleaner tears up after being gifted apartment

20 ஆண்டுகளாக அடுக்குமாடி குடியிருப்பில் துப்புரவு பணியாளராக வேலைபார்த்துவந்த பெண் ஒருவருக்கு குடியிருப்புவாசிகள் செய்த நெகிழ்ச்சியான காரியம் தற்போது வைரலாகிவருகிறது.

கொரோனா காரணமாக உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர்தான் அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் உள்ள ஆடம்பர கட்டிடம் ஒன்றில் கடந்த 20 ஆண்டுகளாக, துப்புரவாளராக பணிபுரிந்து வரும் ரோஸா. கொரோனா பயம் அதிகமானதால் ரோஸா தான் 20 ஆண்டுகளாக பார்த்த வேலையை இழக்கும் சூழல் உருவானது. இதனால் வருமானம் இல்லாமல் அவதிப்படுவந்த அவர் தனது குடும்பத்தினருடன் தனது சகோதரியின் வீட்டிற்கு சென்று அங்கு தங்கிவந்துள்ளார்.

இந்நிலையில் ரோஸாவின் இந்த நிலையை தெரிந்துகொண்ட அடுக்குமாடி குடியிருப்புவாசிகள், ரோஸாவுக்கு ஏதாவது செய்யவேண்டும் என ஆசைபட்டுள்ளனர். இதனை அடுத்து அவர்கள் ரோஸாவுக்கு கால் செய்து, தங்கள் அடுக்குமாடி குடியிருப்புக்கு வருமாறு அழைத்துள்ளனர்.

சரி, ஏதோ வேலை உள்ளதுபோல் என நினைத்து, கையில் பக்கெட், துடைப்பம், சீருடை என தனது வழக்கமான பணிக்காக ரோஸா அங்கு சென்றுள்ளார். உடனே அங்கிருந்தவர்கள், அவரை அழைத்துக்கொண்டு, அதே அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த பெரிய வீடு ஒன்றை சுற்றி காட்டுகின்றனர். அந்த வீட்டின் அளவு சுமார் 2400 சதுர அடி. இந்த வீட்டைத்தான் சுத்தம் செய்ய தம்மை அழைத்துள்ளார்கள் என யோசித்துக்கொண்டிருந்த ரோஸாவுக்கு அப்போதுதான் மிகப்பெரிய இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

ஆம், அந்த பெரிய வீடே ரோஸாவுக்குத்தான். வறுமையால் வாடிய ரோஸாவுக்காக குடியிருப்புவாசிகள் ஒன்று சேர்ந்து, அந்த வீட்டை வாங்கி 2 வருட குத்தகைக்கு இலவசமாக அந்த வீட்டை ரோஸாவிடம் கொடுத்துள்ளனர்.

இதனை சற்றும் எதிர்பாராத ரோஸா, அடுக்குமாடி குடியிருப்புவாசிகளின் செயலை கண்டு ஆனந்த கண்ணீர் வடித்துள்ளர். இந்த காட்சிகள் வீடியோவாக வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Source: Reddit