உலகம்

தோளில் மலைப்பாம்புடன் செய்தி வாசித்த இளம்பெண்! ஆக்ரோஷமாக பாம்பு செய்த செயலை பார்த்து அதிர்ச்சியான பெண்! வைரலாகும் வீடியோ.

Summary:

Snake

பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் தோளில் மலைப்பாம்பை வைத்து கொண்டு செய்தி வாதித்த போது கையில் இருந்த மைக்கைப் பார்த்து ஆக்ரோஷமான பாம்பு அதனை சீண்டியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள பெண் செய்தியாளரான நைன் நெட்வொர்க் சேனலில் வேலை பார்க்கும் இளம்பெண் ஒருவர் தோளில் மலைப்பாம்புடன் நேரலையில் செய்தி வாசித்துள்ளார். 

அதாவது பாம்புகளின் பாதுகாப்பு குறித்த சிறப்பு நேரலைக்காக இளம்பெண் ஒருவர் பாம்புகள் பண்ணைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு ஒரு பாம்பை எடுத்து தனது தோளில் போட்டு கொண்டு தனது நேரலையை ஆரம்பித்துள்ளார்.

அப்போது அந்த பெண்ணின் கையில் இருந்த கருப்பு நிற மைக்கை பார்த்த பாம்பு ஆக்ரோஷமாக தீண்டியதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார் அந்த செய்த வாசிப்பாளர். இக்காட்சி தற்போது இணையத்தில் வெகுவாக பரவி வருகிறது.


Advertisement