சீனாவிலிருந்து இந்தியா திரும்பிய புதுக்கோட்டை மாணவன்! மனவேதனையுடன் விடுத்த கோரிக்கை!

சீனாவிலிருந்து இந்தியா திரும்பிய புதுக்கோட்டை மாணவன்! மனவேதனையுடன் விடுத்த கோரிக்கை!



puudkkottai student request about coronovirus

சீனாவில் ஹுபெய் மாகாணத்தில் உள்ள உஹான் நகரில் உருவாக்கிய கொரனோ வைரஸ் தற்போது அதிவேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த கொரனோ வைரஸ் பாதிப்பினால் இதுவரை 213 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உலகம் முழுவதும் 10000க்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்தக் கொடிய வைரஸ் சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா, ஜப்பான், வடகொரியா, தென்கொரியா, தாய்லாந்து, உள்ளிட்ட பல நாடுகளிலும் பரவி வருகிறது. மேலும் தற்போது அந்த பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சீனாவில் உள்ள பிற நாட்டினர் அனைவரும் தாயகம் திரும்பி வருகின்றனர்.

china

இந்நிலையில் சீனாவிலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அமிஸ் பிரியன் என்ற மாணவனும், திருவண்ணாமலையை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவரும் இந்தியா திரும்பியுள்ளனர். இந்நிலையில் மாணவர் அமிஸ் பிரியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் கடந்த 4 ஆண்டுகளாக சீன மருத்துவம் பயின்று வருகிறேன் .பல்கலைக்கழகம் வுஹான் நகரிலிருந்து 200  கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களை சொந்த ஊர்களுக்கு திரும்ப கூறியதை தொடர்ந்து நாங்கள் வந்துள்ளோம். எங்களுக்கு சீனாவில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இந்திய விமான நிலையத்திலும் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  ஆனாலும் சீனாவிலிருந்து வரும் அனைவரையும் நோயாளியாக பார்க்கும் மனநிலை இந்தியாவில் உள்ளது. அதனை மக்கள் மாற்றிக்கொள்ளவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் சீனாவில் இருந்து நாடு திரும்பிய எவருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை. யாரும் பீதியடைய வேண்டாம் என தமிழக அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.