உக்ரைனை விட கொடுமை.! சிக்கித்தவிக்கும் மக்கள்.! போர்க்களமாக மாறிய இலங்கை.!

உக்ரைனை விட கொடுமை.! சிக்கித்தவிக்கும் மக்கள்.! போர்க்களமாக மாறிய இலங்கை.!



protest in srilanka

இலங்கையில் எரிபொருள், உணவுப்பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வுடன், தினசரி பல மணி நேர மின்வெட்டும் அந்நாட்டு மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றன. இலங்கை அரசு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இலங்கையில் அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை அரசு தவிக்கிறது.

இதனால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்ந்து உள்ளது. மேலும், அந்நாட்டில் எரிவாயு சிலிண்டருக்கு கடுமையாக பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. போர் காலத்தில் கூட காணப்படாத அரிசியின் விலை  கிலோ ஒன்றுக்கு 448 இலங்கை ரூபாயாக உள்ளது (128 இந்திய ரூபாய்). ஒரு லிட்டர் பாலின் விலை ரூ.263 (ரூ. 75 இந்திய ரூபாய்) உள்ளது. இதனால் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இலங்கை வரலாற்றிலேயே கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டிருப்பது மக்களுக்கு அதிபர் கோட்டபாய ராஜபக்சே மீது ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

 எனவே, நேற்று அதிபர் மாளிகையை சுற்றிவளைத்த மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் விலைவாசி உயர்வை கண்டித்து  அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே உடனடியாக பதவி விலகக் கோரி இலங்கை தலைநகர் கொழும்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும், இலங்கை அதிபரின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதி போர்க்களமாக மாறியுள்ளது.