உலகம்

பிலிப்பைன்ஸை தொடர்ந்து சீனாவை தாக்கியது 'மங்குட்' புயல்!! சீன மக்கள் வெளியேற்றம்!!

Summary:

mangut attacked china after philiphines

மணிக்கு 200 கி.மீ வேகத்தில் வீசிய மங்குட் புயல் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள முக்கிய தீவான லூசனின் வட கிழக்கு பகுதியில் உள்ள பாக்கோ என்ற இடத்தில் கரையை கடந்தது. இந்த பயங்கர மங்குட் புயலால் இதுவரை 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெளியேறினார்கள்

மங்குட் புயல் கரையை கடந்த நிலையிலும் அது வலுவிழக்காமல் சீனாவின் தெற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் ஹாங்காங் பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கபட்டுள்ளனர். 

புயலின் தாக்கம்

பிலிப்பைன்சை தொடர்ந்து அங்கிருந்து நகர்ந்த மங்குட் புயல், கிழக்கு ஆசிய நாடான ஹாங்காங்கையும்   தாக்கியது. இதன்பின் அங்கிருந்து நகர்ந்து, சீனாவின் குவாங்டாக் மாகாணத்தை தாக்கியது. இதையடுத்து, அங்குள்ள, 25 லட்சத்துக்கும் அதிகமானோர், பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். தெற்கு சீனாவில் பல விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. 'புயல், நாளை பலவீனமடைந்துவிடும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Advertisement