இது என் கடைசி வீடியோ! யாரையும் காதலிக்காதீர்கள்.! இன்ஸ்டாவில் லைவில் தூக்கில் தொங்கிய வாலிபர்!

மத்தியபிரதேசம் மாநிலத்தில் நிகழ்ந்த ஒரு இளைஞரின் தற்கொலை சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தி வருகிறது. இன்ஸ்டாகிராம் லைவ் வீடியோவில் தற்கொலை செய்த சம்பவம் அனைவரையும் கலங்க வைத்துள்ளது.
ராகுல் அகிர்வர் என்ற 20 வயது வாலிபர் ஒரு பிரபல யூடியூப் பெண்மணியை காதலித்தார். ஆரம்பத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், சில காரணங்களால் இருவருக்கும் இடையே காதல் பிரிவு ஏற்பட்டது.
வீடியோவில் கடைசி மெசேஜ்
அந்த பிரிவால் மிகுந்த மனவேதனையில் இருந்த ராகுல், தனது வாழ்க்கையை முடிக்க முடிவு செய்தார். இதைத் தன்னுடைய Instagram Live மூலம் வெளிப்படுத்திய அவர்,
இதையும் படிங்க: பாபா வங்கா கணிப்பின்படி பேரழிவு 82% உறுதி! இனி நடக்கப்போவது என்ன? அதிர்ச்சியில் மக்கள்...
"இது என் கடைசி வீடியோ. எனக்கு இனி வாழ விருப்பமில்லை. யாரையும் காதலிக்காதீர்கள்,"
என்று கூறியவாறு தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை வீடியோ வைரலானது
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் விரைவில் வைரலாக பரவி, ராகுலின் நண்பர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.
போலீசார்ரின் விசாரணை
இந்த சம்பவம் குறித்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. ராகுலின் திடீர் முடிவால் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சி மற்றும் மன வேதனை நிலவுகிறது.
இதையும் படிங்க: ஆட்டோ வடிவிலான புதிய ஆடம்பர பை! இதன் பெறுமதி எவ்வளவு தெரியுமா? இந்த விலைக்கு 17 ரியல் ஆட்டோவே வாங்கிடலாம்!