பாபா வங்கா கணிப்பின்படி பேரழிவு 82% உறுதி! இனி நடக்கப்போவது என்ன? அதிர்ச்சியில் மக்கள்...

உலகம் முழுவதும் பல தீர்க்கதரிசிகள் இருந்தாலும், பாபா வங்கா எனும் பல்கேரிய நாட்டு பெண், தனது அதிசயமான அறிவுத்திறன் மற்றும் சரியான எதிர்கால கணிப்புகள் மூலம் பெரும் புகழ் பெற்றவர். சிறுவயதிலேயே பார்வையை இழந்த பாபா வங்கா, அதன் பிறகு எதிர்காலத்தை காணும் ஒரு தெய்வீகத் திறன் பெற்றதாக நம்பப்படுகிறது.
பாபா வங்காவின் பிரபலமான கணிப்புகள்
தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை உலகின் முக்கியமான அரசியல் மாற்றங்கள், இயற்கை பேரழிவுகள் மற்றும் விஞ்ஞான வளர்ச்சிகள் போன்றவற்றை முன்கூட்டியே கணிக்க பயன்படுத்தினார். இவரது கணிப்புகளில் பல நிகழ்வுகள் ஆண்டுகள் கழித்தும் உண்மையாக நிகழ்ந்துள்ளன என்பது மக்களிடையே அதிர்ச்சி அளிக்கிறது.
ஆண்டுதோறும் எழுதப்பட்ட கணிப்புகள்
பாபா வங்கா, தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு மட்டும் அல்லாமல், ஒவ்வொரு ஆண்டும் நிகழக்கூடிய முக்கியமான விஷயங்களை எழுதி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதை அவரது பரம்பரை மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆட்டோ வடிவிலான புதிய ஆடம்பர பை! இதன் பெறுமதி எவ்வளவு தெரியுமா? இந்த விலைக்கு 17 ரியல் ஆட்டோவே வாங்கிடலாம்!
2025 ஆண்டு கணிப்புகள்
2025ஆம் ஆண்டு பற்றி பாபா வங்கா சில பயங்கரமான கணிப்புகளை செய்துள்ளார். அவர் உலக அழிவின் தொடக்கம் இந்த ஆண்டிலேயே ஆரம்பமாகும் என கூறியுள்ளார். மேலும், 5079ஆம் ஆண்டில் பூமி முற்றிலும் அழிந்து விடும் என்றும், அப்போது மனிதர்கள் பூமியில் இருப்பது கூட இல்லையென்றும் அவர் பதிவு செய்துள்ளார்.
ஜப்பானில் பேரழிவு ஏற்படும் வாய்ப்பு
இந்த வருட கணிப்புகளில் முக்கியமான ஒன்று — ஜப்பானில் பெரும் பூகம்பமும் சுனாமியும் ஏற்படும் என்பதாகும். பாபா வங்கா, 2011ஆம் ஆண்டில் ஏற்பட்ட பேரழிவைவிட இது அதிக அழிவுகளை ஏற்படுத்தும் என எச்சரித்திருந்தார்.
இது சமீபத்திய அறிவியல் அறிக்கைகளிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜப்பான் அரசு மற்றும் தேசிய பூகம்ப ஆய்வாளர் குழு வெளியிட்ட தகவலின்படி, அடுத்த 30 ஆண்டுகளில் 7 ரிக்டர் அளவை அல்லது அதற்கு அதிகமான நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பு 82% ஆக அதிகரித்துள்ளது. இது முன்பாக 75% மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.