ஆட்டோ வடிவிலான புதிய ஆடம்பர பை! இதன் பெறுமதி எவ்வளவு தெரியுமா? இந்த விலைக்கு 17 ரியல் ஆட்டோவே வாங்கிடலாம்!

பிரபல ஃபேஷன் பிராண்டான Louis Vuitton தனது அண்மைய வெளியீட்டில் ஆட்டோ வடிவிலான புதிய ஆடம்பர பையை அறிமுகம் செய்துள்ளது. இந்த வினோத பை பற்றிய தகவல்கள் தற்போது இணையதளங்களை ஆக்கிரமித்து, வைரலாக பரவி வருகிறது.
இன்றைய சமூகத்தில் ஆடம்பர பொருட்களுக்கு பெரும் ஈர்ப்பு காணப்படுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு பல பிரபல நிறுவனங்கள் தனித்துவமான தயாரிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வரிசையில் Louis Vuitton நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள இந்த பை, அதன் வடிவமைப்பாலும் விலையாலும் மக்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது.
பையின் விலையை நெட்டிசன்கள் அதிர்ச்சி
இந்த ஆட்டோ வடிவ பையின் விலை சுமார் ரூ.35 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாம். இது இணையத்தில் பெரும் விவாதமாக மாறியுள்ளது. இந்த ஒரு பையை வாங்குவதற்கு உண்மையான ஆட்டோக்களில் 17வாங்கி விடலாம் என இந்த பையின் விலை குறித்து இணையத்தில் நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இந்த பையின் விலை தொடர்பாக சமூக வலைதளங்களில் போலி ஆட்டோவுக்கு ரூ.35 லட்சமா எனும் வகையில் நையாண்டி கலந்த விமர்சனங்கள் பரவி வருகின்றன. இது Louis Vuitton நிறுவனத்தின் பை பற்றிய பிரச்சாரத்தையும் மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.