பாழடைந்த வீட்டில் 191 சடலங்கள்! 5 வருடங்களாக அழுகிய உடல்களும், பூச்சிகளும் கணவன், மனைவியின் தில்லாலங்கடி வேலை! நாட்டை உலுக்கிய வழக்கில் அதிரடி தீர்ப்பு...



colorado-funeral-home-body-mishandling-case

அமெரிக்காவின் கொலராடோ மாநிலம் பென்ரோசு பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தில் இருந்து வந்த துர்நாற்றம் காரணமாக, போலீசார் மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகள் 2023 ஆம் ஆண்டு சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில், 191 உடல்கள் சிதைந்த நிலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அழுகிய உடல்களால் பரவிய துர்நாற்றம்

சில அறைகளுக்கு நுழைய முடியாத அளவிற்கு அழுகிய உடல்களும், பூச்சிகளும் சூழ்ந்திருந்தன. சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது அமெரிக்காவை அதிரவைத்த சம்பவமாக மாற்றியுள்ளது.

ரிட்டர்ன் டு நேச்சர் நிறுவன உரிமையாளர் கைது

இந்த பரிதாபகரமான சம்பவத்தின் முக்கியக் குற்றவாளி ஜான் ஹால்ஃபோர்ட். இவர் தனது மனைவி கேரி ஹால்ஃபோர்டுடன் இணைந்து, “Return to Nature” என்ற இறுதிச்சடங்கு நிறுவனத்தின் மூலம் உடல்களை முறையாக எரிக்காமல் பதுக்கி வைத்திருந்தார்.

இதையும் படிங்க: இலங்கை கிரிக்கட் மைதானத்தில் திடீரென நுழைந்த பாம்பு! அதிர்ச்சியை ஏற்படுத்திய தருணம்...

போலி சாம்பல் கலசங்கள் மற்றும் தவறான அடக்கம்

உறவினர்களுக்கு போலி சாம்பல் கலசங்கள் அனுப்பப்பட்டதுடன், சில சந்தர்ப்பங்களில் தவறான உடல்கள் புதைக்கப்பட்ட ஆதாரங்களும் உள்ளன. ஹால்ஃபோர்ட், 191 உடல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

கோடிகளில் மோசடி செய்த ஹால்ஃபோர்ட்

COVID-19 நிவாரணத்துக்காக அமெரிக்க அரசு வழங்கிய ₹7.5 கோடி நிதியை, ஹால்ஃபோர்ட் தனக்காக மோசடி செய்தார். இதில், ₹1 கோடி மதிப்புள்ள எஸ்யூவிகள், ₹25 லட்சம் மதிப்புள்ள கிரிப்டோ கரன்சி, மற்றும் Gucci, Tiffany & Co போன்ற பிரபல ஆடம்பர கடைகளில் வாங்கிய பொருட்களும் அடங்கும்.

மேலும், வாடிக்கையாளர்களிடமிருந்தும் ₹1.1 கோடிக்கு மேல் வசூலித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் இழப்பீடு

இந்த விவகாரத்தில் நீதிபதி நினா வாங், இது சாதாரண மோசடி அல்ல என்றும், பல குடும்பங்களுக்கு உணர்ச்சி பாதிப்பை ஏற்படுத்திய பேரழிவு எனக் கூறி, ஜான் ஹால்ஃபோர்டுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கினார். கூடுதலாக, அவர் ₹9 கோடி இழப்பீடாக கட்ட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கேரி ஹால்ஃபோர்ட் மீது விசாரணை இன்னும் தொடருகிறது. இது அமெரிக்கா முழுவதும் பெரும் கண்டனத்தை ஏற்படுத்திய மனிதாபிமானமற்ற சம்பவமாக விளங்கியுள்ளது.

 

 

இதையும் படிங்க: திடீரென கடைக்குள் நுழைந்து துப்பாக்கியை காட்டிய மர்மநபர்! அடுத்தடுத்து 5 பேர்! பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! வைரலாகும் வீடியோ...