முதல்ல நாய்னு தான் நெனச்சோம்!! ஆனால்?? வாஷிங்மெஷினை திறந்து பார்த்த தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி..

முதல்ல நாய்னு தான் நெனச்சோம்!! ஆனால்?? வாஷிங்மெஷினை திறந்து பார்த்த தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி..


fox found in washing machine

லண்டனில் உள்ள வீடு ஒன்றில் நரி ஒன்று திடீரென புகுந்து, அதை வெளியில் விரட்ட வீட்டின் உரிமையாளர்கள் செய்த செயல் தற்போது வைரலாகி வருகிறது.

லண்டனில் உள்ள வீடு ஒன்றில் கணவன் மனைவி இருவரும் வீட்டின் கதவை திறந்துவைத்துவிட்டு சற்று வெளிய வந்துள்ளனர். அவர்கள் இருவரும் மீண்டும் வீட்டுக்குள் சென்றபோது அங்கு ஏதோ ஒரு விலங்கு இருந்துள்ளது. முதலில் அது நாய் என நினைத்த அவர்கள் வேகமாக ஓடிச்சென்று அதனை வெளிய விரட்ட முயற்சி செய்துள்ளனர்.

ஆனால் அதன்பின்னர்தான் அது நாய் இல்லை, நரி என்பது அவர்களுக்கு தெரியவந்துள்ளது. பின்னர் அந்த நரி வீட்டில் இருந்து வெளியில் ஓடாமல் வீட்டிற்குள் சென்றுவிட்டது.

பின்னர் வீட்டிற்குள் புகுந்த நரியை அங்கும், இங்குமாக வீட்டின் உரிமையாளகர் நீண்ட நேரமாக தேடியுள்ளனர். கடைசியாக வாஷிங்மெஷின் கதவை திறந்துபார்த்தபோது நரி, அதனுள் இருந்தது தெரியவந்தது.

பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் அலறியவாறு, கூச்சலிட்டு நரியை வெளியே விரட்ட முயற்சி செய்துள்ளனர். எதற்கும் பிடிகொடுக்காத நரி, வாஷிங்மெஷினுக்குள்ளேயே இருந்துள்ளது.

எப்படி வெளியேற்றுவது என அவர்கள் சிந்தித்தபோது, உணவு தேடி கூட வீட்டிற்கு வந்திருக்கலாமோ என நினைத்து நரிக்கு உணவு மற்றும் தின்பண்டங்களை கொடுத்துள்ளனர். அவர்கள் நினைத்த படியே நரியும் வாஷிங்மெஷினுக்குள் இருந்து வெளியே வந்து அவற்றை சாப்பிட்டுவிட்டு இயல்பாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளது.

அவர்கள் வீட்டில் நடத்த இந்த வித்தியாசமான அனுபவத்தை, வீட்டின் உரிமையாளரான ஒருவர் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தபதிவும் தற்போது இணையத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.