உலகம் லைப் ஸ்டைல்

கடலில் இருந்து வெளியே வந்து ஊருக்குள் உலாவிய 2 டன் கடல் யானை! பிரமிக்கவைக்கும் வீடியோ காட்சி.

Summary:

சிலி நாட்டில் ஊருக்குள் உலாவிய கடல் யானையின் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

சிலி நாட்டில் ஊருக்குள் உலாவிய கடல் யானையின் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

சிலி நாட்டின் புவேர்ட்டோ சிச்னஸ் என்ற கடற்கரை நகரத்தின் தெருக்களில் 2 டன் எடைகொண்ட மம்மூத் என்ற கடல் யானை குதித்து உலாவிக்கொண்டிருந்த வீடியோ காட்சி தற்போது உலகம் முழுவதும் வைரலாகிவருகிறது.

Manuel Novoa என்ற ட்விட்டர் பயனர் ஒருவர் கடல் யானை தெருக்களில் குதித்து குதித்து ஊர்ந்து செல்லும் கட்சியை படம் பிடித்து தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சுமார் 11 வினாடிகள் மட்டுமே ஓடும் அந்த வீடியோவில், பெரிய அளவிலான மீன் ஒன்று தெருவில் ஊர்ந்து செல்வதுபோல் உள்ளது.

2 டன் எடைகொண்ட அந்த கடல் யானை தெருவில் ஊர்ந்து செல்லும் காட்சி பார்ப்பதற்கே மிகவும் வித்தியாசமாக உள்ளது. மேலும் தெருவுக்குள் வந்த அந்த கடல் யானையை அங்கிருந்த மக்கள் நீண்ட நேரம் போராடி, அதற்கு எந்தவித ஆபத்தும் இல்லாமல் மீண்டும் அதனை கடலுக்குள் கொண்டு சேர்ந்துள்ளனர்.


Advertisement