உலகம்

10 லட்சத்தை நெருங்கிய பாதிப்பு.! 50 ஆயிரத்தை நெருங்கும் உயிர் இழப்பு.! கொரோனோவின் பிடியில் சிக்கி தவிக்கும் உலக நாடுகள்.!

Summary:

Corono virus life death and affected cases count

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் என அணைத்து நாடுகளும் கொரோனாவால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்ட செல்கிறது. உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 215,344 என்ற நிலையில் உள்ளது. அந்நாட்டில் இதுவரை 5512 பேர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர்.

மேலும், இத்தாலி நாட்டில் இதுவரை 13,155 பேர் கொரோனோவால் உயிர் இழந்துள்ளனர். ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான் போன்ற நாடுகள் அதிக உயிர் இழப்பில் அடுத்தடுத்த இடத்தில் உள்ளது.

கொரோனா வைரஸ் இதுவரை உலகளவில் 938,923 பேரை தாக்கியுள்ளது. அதில், 47,314 பேர் உயிர் இழந்துள்ளனர். கொரோனவை கட்டுப்படுத்தவும், மருந்து கண்டுபிடிக்கவும் அணைத்து நாடுகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுவருகின்றன.


Advertisement