உலகம் மருத்துவம் Covid-19

உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை! வெளியான அதிர்ச்சி தகவல்!

Summary:

corona increased in world

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆனாலும் இதுவரை கொரோனாவிற்கு தடுப்பு மருந்து எந்த நாட்டிலும் கண்டுபிடிக்க இயலவில்லை. கொரோனாவை கட்டுப்படுத்த உலகின் பல நாடுகளும் தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.21  கோடியைக் கடந்துள்ளது.உலக அளவில் கொரோனாவால் 1,23,78,776 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,388 அதிகரித்து மொத்தம் 5,56,585 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 71,82,394- ஆக உள்ளது. இந்தியாவில் மட்டும் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,790  பேர் அதிகரித்து மொத்தம் 7,94,842 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 479 அதிகரித்து மொத்தம் 21,623 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 4,95,960 பேர் குணம் அடைந்துள்ளனர்.


Advertisement