உலகம் வீடியோ

சாலையில் தாறுமாறாக ஓடி, ஏரியில் பாய்ந்த பேருந்து! பின் நேர்ந்த பெரும் துயரம்! வைரலாகும் ஷாக் வீடியோ!

Summary:

Bus fall in river at china

சீனாவில் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, சாலை தடுப்புகளை உடைத்து ஏரியில் மூழ்கியதில் மாணவர்கள் சிலர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 சீனாவில் உள்ள தென்மேற்கே கைசவ் மாகாணத்தில், வருடாந்திர கல்லூரி நுழைவுத் தேர்வை எழுத மாணவர்கள் பேருந்தில் சென்றுள்ளனர். அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் குறுக்கே தாறுமாறாக சென்று,  சாலையோரத்தில் இருந்த தடுப்புசுவரில் மோதி உடைத்துகொண்டு, ஹாங்ஷான் ஏரியில் விழுந்து மூழ்கியுள்ளது.

இதில் பேருந்தில் பயணம் செய்த மாணவர்கள் உள்பட 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 


Advertisement