சித்தி என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடும் அமெரிக்கர்கள்! என்ன காரணம் தெரியுமா?americans search meaning of chitti

அமெரிக்க அதிபர் தேர்தல், வரும் நவம்பரில் நடைபெற உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக் கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராக இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவரும், ஆப்பிரிக்க அமெரிக்கருமான கமலா ஹாரிஸ் முறைப்படி அறிவிக்கப்பட்டார்.

ஜனநாயகக் கட்சி சார்பில் தான் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையும், கமலா ஹாரிஸ் முறைப்படி ஏற்றுக்கொண்டார். அவர் வெற்றி பெற்றால் நாட்டின் துணை அதிபராகும் முதல் பெண் என்ற பெருமையையும், துணை அதிபராகும் முதல் இந்திய-அமெரிக்க-ஆஃப்ரிக்க பெண்ணாகவும் அவர் இருப்பார். கமலா ஹாரிஸுக்கு 55 வயதாகிறது.

chitti

கமலா ஹாரிஸின் தாய் இந்தியாவை சேர்ந்தவர், தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர் ஆவார். கமலா ஹாரிஸ் இவரது தாய்வழி தாத்தா கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள பைங்காநாடு கிராமத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு பிறந்த 2 பெண் குழந்தைகளில் சியாமளா கோபாலன் என்பவருக்கு மகளாகப் பிறந்தவர்தான் கமலா ஹாரிஸ். 

இந்தநிலையில், கமலா ஹாரிஸ் தனது உரையின் போது சென்னையில் பிறந்து வளர்ந்த தனது தாய் குறித்து மிகவும் நெகிழ்ச்சியாக பேசினார். குடும்ப உறவுகள் குறித்துப் பேசிய போது, 'சித்தி' என்று தமிழில் குறிப்பிட்டார். அமெரிக்க அதிபர் தேர்தலுக்கானப் பிரச்சாரத்தில் இந்திய மொழியில் அதுவும் தமிழில் 'சித்தி' என்று குறிப்பிட்டது, அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

மேலும், இந்த வார்த்தை குறித்து பலரும் சமூக வலைதளங்களில் உணர்ச்சிப்பூர்வமான கருத்துகளைப் பதிவு செய்து வருவதைப்பார்த்த அமெரிக்கர்கள் உள்ளிட்ட பலரும், தற்போது 'சித்தி' என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்பதை இணையதளத்தில் தேடி வருகின்றனர்