உலகம் காதல் – உறவுகள்

13 வயது பள்ளிசிறுவனுக்கு ஏற்பட்ட காதல்.! பெண் செய்த காரியத்தால் இறுதியில் நேர்ந்த கதறவைக்கும் துயரம்!!

Summary:

13 year boy commiting suicide for love failure

பிரித்தானியாவில் ஹேரி ஸ்டோரி என்ற 13 வயது சிறுவன் பள்ளியில் படித்து வந்தநிலையில் தனது தோழியின் மீது கடல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் வேறு ஆணுடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த ஹேரி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஹேரியின் பேற்றோர்கள் கதறியுள்ளனர். மேலும் ஹேரியின் தந்தை அவனுக்கு முதலுதவி சிகிச்சையளித்து அவசரஅவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.ஆனால் அவனை காப்பாற்ற முடியவில்லை.

இந்நிலையில் இதுகுறித்து ஹேரியின் தந்தை ஆண்ட்ரூ கூறியதாவது, ஹேரி ரக்பி, கிரிக்கெட், டென்னீஸ் போன்றவற்றை விரும்பி விளையாடுவான். மனதில் எந்த கவலையும் வைத்துக்கொள்ளாமல் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருந்து வந்தான்.  ஒரு தொலைக்காட்சி தொடரில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்வார். அப்போது அவரை சிலர் காப்பாற்றி விடுவார்கள். இதனை பார்த்தே ஹேரியம் அவ்வாறு செய்துள்ளான். 

மேலும் அவன் இறப்பதற்கு முன்னர் தனது நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில், எனக்கு தற்கொலை செய்ய தோன்றுவதாக மெசேஜ் அனுப்பியுள்ளான். ஆனால் அதனை அனைவரும் விளையாட்டாக எடுத்து கொண்டுள்ளனர். சிறுவயதிலேயே தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 


Advertisement