சங்கம் முக்கியமா?.. சாப்பாடு முக்கியமா? என்று கேட்டதற்கு இளைஞன் கூறிய பகிரங்க பதில்!. வைரலாகும் வீடியோ!

சங்கம் முக்கியமா?.. சாப்பாடு முக்கியமா? என்று கேட்டதற்கு இளைஞன் கூறிய பகிரங்க பதில்!. வைரலாகும் வீடியோ!



young boy talking with crying

தற்போது சமூகவலைதளங்களில் குழந்தைகள் பேசும் வீடியோ அனைவரையும் கவர்ந்து, அதிகப்படியான லைக்குகளையும், கமெண்டுகளையும் பெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான குழந்தையின் வீடியோ "அடிக்காமல் திட்டாம.. குணமா.. வாயில சொல்லணும்.." என்று பேசிய வீடியோ பல தொலைக்காட்சிகளிலும் வெளியாகி  பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் தற்பொழுது ஒரு சிறுவனின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர், உன்னை சங்கத்தில் முக்கிய உறுப்பினராக சேர்த்துவிட்டோம், எனவே நீ அதுக்காக உழைக்க வேண்டும் எனக்கூறி, சங்கத்திற்காக விட பணம் வாங்கி வா என்று கூறும்போது, அந்த சிறுவன் வருகிறேன் எனக் கூறுகிறான்.

உடனே வந்துடுவியா என்று கேட்பதற்கு, சாப்பிட்டுவிட்டு வருகிறேன் என கூறுகிறான். அதற்கு அந்த இளைஞர், உனக்கு சங்கம் முக்கியமா இல்லை சாப்பாடு முக்கியமா? எனக் கேட்டதற்கு, பகிரங்கமாக சாப்பாடு தான் முக்கியம் என்று கூறுகிறான்.

மேலும் அந்த இளைஞர் சங்கத்தின் உறுப்பினர் இவ்வாறு கூறலாமா என்று கேட்டதற்கு அந்த சிறுவன் அழுதுகொண்டே பசிக்கும் அல்லவா சாப்பாடு தான் முக்கியம் எனக்கூறி பேசும் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.