தமிழ்கத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ; வானிலை மையம் தகவல்..!Which districts in Tamilnadu are likely to receive rain in the next three hours; Weather Center information..!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் பத்து மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இரண்டு நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யு கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை மற்றும் திருவாரூர் ஆகிய பத்து மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.