அரசியல் தமிழகம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் தற்போதைய நிலை என்ன? மருத்துவமனை அறிக்கை.

Summary:

உடல்நலம் பாதிக்கப்பட்டநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

உடல்நலம் பாதிக்கப்பட்டநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

விஜயகாந்துக்கு கொரோனா:
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை தொடர்ந்து அவரது மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு அவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மீண்டும் உடல்நலம் பாதிப்பு:
சில நாட்களில் சிகிச்சை முடிந்து இருவரும் வீடு திரும்பினர். இந்நிலையில் கேப்டன் விஜயகாந்திற்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கபடுநிலையில் கடந்த 6 ஆம் தேதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும், அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்:
உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் தற்போது உடலநலம் தேறி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 


Advertisement