தமிழகம்

பைக்கில் பின்னால் உட்கார்ந்து குடைப்பிடித்து வந்த பெண்! நொடி பொழுதில் நிகழ்ந்த விபரீதம்! - வைரலாகும் வீடியோ.

Summary:

Umbrella

மழைக்காலம், வெயில் அதிகமான நாள்களிலும் பொதுவாக அனைவரும் வெளியே செல்லும் போது கையில் குடையை எடுத்து செல்வர். இன்னும் சில பேர் பைக்கில் பயணம் செய்யும் போது கூட பின்னால் குடை பிடித்து கொண்டு செல்கின்றனர்.

அதேபோல் இங்கு ஒரு பெண் தனது கணவருடன் பைக்கின் பின்னால் உட்கார்ந்து கொண்டு குடைப்பிடித்து வந்துள்ளார். அப்போது காற்று பலமாக வீசியதால் குடை காற்றில் இழுக்கப்பட்டு பின்னால் உட்கார்ந்து அந்த பெண்ணை சேர்த்து கீழே விழுந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் அந்த பெண் கீழே விழுந்ததும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அந்த பெண்ணை ஓடி வந்து தூக்கியுள்ளனர். கெட்டதிலும் ஒரு நல்லது என்றால் அந்த சாலையில் பின்னால் எந்த ஒரு வண்டியும் வராததால் அந்த பெண் அதிஷ்டவசமாக உயிர் தப்பித்து உள்ளார்.


Advertisement