தா.பழூர்: டிராக்டர்-இருசக்கரவாகனம் மோதி பயங்கர விபத்து.. இளைஞர் பரிதாப பலி..!! tractor-hit-the-two-wheeler

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் அடுத்த மதனதூர் காலனியில் வசித்து வருபவர் செல்வராசு. இவரின் மகன் மோகன்தாஸ் (வயது 18). இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். அதே பகுதியைச் சார்ந்தவரின் மகன் உதயகுமார். இவர்கள் இருவரும் சம்பவத்தன்று மதனதூரிலிருந்து தா.பழூர் நோக்கி பயணம் செய்துள்ளனர். 

அந்த சமயத்தில் அண்ணங்காரம்பேட்டை கிராமத்தைச் சார்ந்த லோகேஷ் என்பவர் காரைக்குறிச்சியிலிருந்து டிராக்டரில் சென்றுள்ளார். இவர்கள் இருவரும் தா.பழூர் செல்லியம்மன் கோவில் அருகே சென்ற சமயத்தில் எதிர்பாராதவிதமாக இரு சக்கர வாகனம் டிராக்டர் மோதி விபத்துக்குள்ளாகவே, விபத்தில் காயமடைந்த மோகன்தாஸ் மற்றும் உதயகுமார் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். 

Ariyalur

இதில் மோகன்தாஸ் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், உதயகுமார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். இந்த விஷயம் தொடர்பாக தா.பழூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.