
Thirupathtur
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர் குப்பத்தை சேர்ந்தவர் ஜெகன். இவர் கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போது ஒரு பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்பழக்கத்தால் அந்த பெண்ணின் மீது ஜெகனுக்கு ஒரு தலையாக காதல் ஏற்ப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒரு நாள் அந்த பெண்ணிற்கு திருமணம் நிச்சயமான நிலையில் தனது காதலை ஜெகன் அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். ஆனால் அந்த பெண் அதனை ஏற்று கொள்ளவில்லை.
அதனை அடுத்து ஒரு நாள் அந்த பெண்ணை பின் தொடர்ந்து வந்த ஜெகன் அந்த பெண் பேருந்தில் இருக்கும் போது திடீரென அந்த பெண்ணின் கழுத்தில் தாலி கட்டியுள்ளார். உடனே அந்த பெண் கத்தியுள்ளார். அதனை அடுத்து பேருந்தில் உள்ளவர்கள் ஜெகனை தர்ம அடி அடித்துள்ளனர்.
அதனை பின் அந்த இளைஞரை வாணியம்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். காவல் துறையினர் அந்த இளம்பெண்ணின் புகாரை ஏற்று கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement